பெற்றோர்களே உஷார்! பப்ஜி போன்ற ஆன்லைன் கேம்ஸ் மிகவும் ஆபத்தானது: எச்சரிக்கும் குழந்தைகள் நல ஆணையம்

பப்ஜி, காட் ஆஃப் வார் போன்ற மொபைலில் கூட விளையாடக் கூடிய ஆன்லைன் கேம்ஸ் மிகவும் ஆபத்தானது என தில்லி குழந்தைகள் நல ஆணையம் எச்சரித்துள்ளது.
பெற்றோர்களே உஷார்! பப்ஜி போன்ற ஆன்லைன் கேம்ஸ் மிகவும் ஆபத்தானது: எச்சரிக்கும் குழந்தைகள் நல ஆணையம்

பப்ஜி, காட் ஆஃப் வார் போன்ற மொபைலில் கூட விளையாடக் கூடிய ஆன்லைன் கேம்ஸ் மிகவும் ஆபத்தானது என தில்லி குழந்தைகள் நல ஆணையம் எச்சரித்துள்ளது.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மற்றும் விர்ச்சுவல் தொழில்நுட்பங்கள் நமது வாழ்வில் தவிர்க்க முடியாததாகி வருகிறது. அதிலும் குறிப்பாக அனைத்தும் ஆன்லைனில் கிடைப்பதாலும், அனைவரிடமும் ஸ்மார்ட்ஃபோன்கள் இருப்பதாலும் அதன் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

இதன் தாக்கம் சிறுவர் முதல் பெரியவர் வரை வைரலாகப் பரவியுள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற செயலிகளின் பயன்பாடு இல்லாதவர்கள் இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது. இவைகளால் நன்மைகள் சில இருந்தாலும், ஆபத்துகளும் நிறைந்திருக்கத்தான் செய்கிறது. இவை யாவும் நமது பயன்பாடுகளைப் பொறுத்ததாகவே அமைகிறது.

அதிலும் குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடத்தில் மொபைல் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் உபோயகிப்பதற்கு சோஷியல் மீடியா மற்றும் ஆன்லைன் கேம்ஸ்கள் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 

இந்நிலையில், பிரபல கேம்ஸ்களான பப்ஜி, ஃபோர்ட்நைட், கிராண்ட் தெஃப்ட் ஆடோ (ஜிடிஏ), காட் ஆஃப் வார், ஹிட்மேன், பிளேக் இன்க், போகிமான் போன்ற கேம்ஸ் வகைகள் மிகவும் ஆபத்தானது என தில்லி குழந்தைகள் நல ஆணையம் எச்சரித்துள்ளது. அவற்றில் வன்மம் மற்றும் பாலியல் ரீதியலான தொகுப்புகள் அதிகம் அடங்கியுள்ளதால் அவை குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் மனநலனில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி பாதிப்பை உண்டாக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் இந்த வகை கேம்ஸ்களால் சிறுவர்களின் மனதில் அதிக வெறுப்பு, கோபம், வன்மம், பழிவாங்குதல், வஞ்சகம் போன்ற எண்ணம் அழுத்தமாக பதிந்து, தவறான வழிநடத்தல்கள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற ஆபத்து குறித்து அனைத்து பள்ளிகளும் பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் தில்லி குழந்தைகள் நல ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com