வெண்டைக்காய் பொறியல் செய்யும் போது கொழகொழப்பு நீங்க இதை செய்யுங்கள்!

கூட்டு, குழம்புக்குரிய காய்கறிகளை முதல்நாள் இரவிலேயே நறுக்கி வைத்து விடுங்கள்.
வெண்டைக்காய் பொறியல் செய்யும் போது கொழகொழப்பு நீங்க இதை செய்யுங்கள்!
  • கூட்டு, குழம்புக்குரிய காய்கறிகளை முதல்நாள் இரவிலேயே நறுக்கி வைத்து விடுங்கள்.
  • தேங்காயைத் துருவி காற்று புகாத பாட்டிலில் அடைத்து பிரீசரில் வைத்துவிடுங்கள். மூன்று நான்கு நாட்கள் அதனை பயன்படுத்தலாம்.
  • குழம்பு, கூட்டு வகைகளுக்கு தேங்காய்ப்பால் தேவைப்பட்டாலும் முதல் நாள் இரவிலேயே தயாரித்து பிரிஜ்ஜில் வைத்துவிடலாம்.
  • பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் போன்றவைகளை தோல் நீக்கி சுத்தப்படுத்தி பிரிஜ்ஜில் வைத்திருந்தால் தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தலாம்.
  • கட்லெட் தயாரித்து முட்டையிலும் ரொட்டித் தூளிலும் முக்கி பிரிஜ்ஜில் வைத்திருந்தால் தேவைப்படும் நாளில் எடுத்து வறுத்துப் பயன்படுத்தலாம்.
  • சான்ட்விச்சின் உள்ளே வைக்கும் பொருட்களையும் முதலிலேயே தயாரித்து வைத்துவிட்டால் தேவைப்படும்போது ரொட்டித் துண்டுகளை வைத்து உடனே தயாரிக்கலாம். 

- ஆர்.ராமலட்சுமி, திருநெல்வேலி.

  • வெண்டைக்காயைப் பொறியல் செய்வதற்கு முன்பு, வெண்டைக்காயை நறுக்கி வெயிலில் சிறிது நேரம் காய வைத்துப் பிறகு பொரியல் செய்தால் வழ வழப்பு நீங்கிவிடும்.
  • ரவா தோசை செய்யும்போது இரண்டு தேக்கரண்டி சோளமாவு சேர்த்து செய்து பாருங்கள். தோசை நன்கு சிவந்து மொறு, மொறுவென நன்றாக இருப்பதோடு உடம்பிற்கும் நல்லது.
  • வெண்ணெய்யில் உப்பைத் தூவி விட்டால் அது நாட்பட்டாலும் கெடாமல் இருக்கும்.
  • ஊறுகாய் தயாரிக்கும்போது கடுகுக்கு பதில் சிறிதளவு சோம்பை தாளித்து சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
  • மாவடு ஊறுகாயில் சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்தால் பூச்சிகள் வராமல் நீண்டநாள் இருக்கும். விரைவில் கெட்டும் போகாது.
  • பிரிட்ஜ்ஜில் இட்லி மாவை வைக்கும்போது உப்பு சேர்க்கக் கூடாது. உப்பு சேர்த்து வைத்தால் விரைவில் மாவு புளித்து, கெட்டு விடும்.
  • கோதுமை மாவை அரைத்து அதில் ஒரு டம்ளர் மோர் ஊற்றி கரைத்து உடனே தோசை வார்க்கலாம்.

- எல். உமா ராதாகிருஷ்ணன், வாணியம்பாடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com