செய்திகள்

ஆண்களே! காஃபி, டீயை இனிமேலும் உங்கள் மீசையில் வடிகட்டும் அபத்தம் வேண்டாம்... வந்து விட்டது புதிய?!

RKV

காஃபி, டீ, கூல் ட்ரிங்ஸ், ஜூஸ் எதுவானாலும் அதை மீசையில் படாமல் அருந்துவது ஆண்களுக்குப் பெரிய சவால். பெண்களுக்கும் கூட மேலுதட்டில் நுரை மீசை உண்டாகாமல் மேற்கண்ட திரவங்களை அருந்துவது கடினமே. இதெல்லாம் ஒரு பெரிய கஷ்டமா? குடிச்சமா...துடைச்சமான்னு போய்ட்டே இருக்கனும்’ என்று சிலர் முணுமுணுக்கலாம். அவர்களுக்காக அல்ல இந்தச் செய்தி. ஒவ்வொரு முறை காஃபீ, டீ அருந்தும் போதும், ஜூஸ் குடிக்கும் போதும் ஐயோ மீசையைத் துடைத்தோமா இல்லையோ?! என்று சற்று அசூயையாக உணர்பவர்களுக்காகத் தான் இந்தத் தகவல்.

மார்கெட்டில் ‘முஸ்டாச் சீல்டு’ என்று ஒன்று கண்ணில் பட்டது. இதை நமது காஃபி, டீ, ஜூஸ் அல்லது கூல்டிரிங் கப் அல்லது பாட்டிலின் மீதோ அல்லது கிளாஸின் மீதோ பிணைத்துக் கொண்டால் போதும். அது மேலுதட்டுப் பகுதியில் மேற்கண்ட திரவங்களை வடிகட்டி தேங்கி நிற்பதிலிருந்து காக்கிறதாம்.

நல்ல ஐடியா தான் இல்லையா? இல்லாவிட்டால் டூத் பேஸ்ட் விளம்பரத்தில் காட்டப்படுவதைப் போல முதல் நாள் உண்ட உணவை பல்லிடுக்கில் சிக்க வைத்து மறுநாள் நண்பர்களை எதிரில் கண்டு ஃபார்மலிட்டிக்காக சிரிக்கும் போதெல்லாம்... நேத்தென்ன கத்தரிக்காய் பொரியல் சாப்பிட்டியா? கீரை மசியல் சாப்பிட்டியா? பல்லெல்லாம் பச்சையா இருக்கு பார். ஒழுங்கா பல் தேய்க்க கத்துக்கனும்’ என்றூ நமுட்டுச் சிரிப்பு சிரித்து நண்பர்கள் கலாய்க்கத் தோதாக வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் அபாயம் இதிலும் உண்டு.

போலவே, காஃபி, டீ தவிர்த்து ஜூஸியான, ஸ்பைஸியான நூடுல்ஸ், பர்கர், பீட்ஸா போன்றவற்றை உண்ணும் போதும் கூட சீஸ், மசாலாக்கள் போன்றவை மீசையில் ஒட்டிக் கொண்டு சுத்தம் செய்யப்பட நேரும் அவஸ்தையையும் இது தவிர்க்கும். எனவே இனிமேலும் உணவுப் பொருட்களையோ அல்லது பானங்களையோ மீசையில் வடிகட்டும் அபாயங்களைத் தவிர்க்க உதவும் கருவி என்று இதை சந்தையில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT