கிருஷ்ணர் பூமியில் அவதரித்த போது சாட்ஷாத் அச்சு அசலாக இப்படித்தான் இருந்தாராம்!

ஜெய்ப்பூர் கோவிந்த தேவ்ஜி கோயிலைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 
கிருஷ்ணர் பூமியில் அவதரித்த போது சாட்ஷாத் அச்சு அசலாக இப்படித்தான் இருந்தாராம்!

ஜெய்ப்பூர் கோவிந்த தேவ்ஜி கோயிலைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

வைஷ்ணவக் கோயில்களில் ஒன்றான கோவிந்த தேவ்ஜி ஆலயம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருக்கிறது. மூர்த்தி கருவறை இன்றி வெளியில் தான் நின்றநிலையில் தரிசனம் தருகிறார். இந்த கோயில் கிருஷ்ணருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அட! எல்லா கிருஷ்ணர் கோயில்களும் அப்படித்தானே என்கிறீர்களா? இல்லை இது அவற்றிலிருந்து எந்தவகையில் வேறுபடுகிறது என்றால், இந்தக் கோயிலின் மூலவர் சிற்பத்தை செதுக்கி இருப்பது சாட்ஷாத் அந்த கிருஷ்ண பரமாத்மாவின் நேரடிப் பேரன் என்பது தான். பிருந்தவனத்திலிருந்து இந்த மூலவிக்ரஹமானது ராஜா சவாய் இரண்டாம் ஜெய்சிங் காலத்தில் அவரால் மிகுந்த ப்ரியத்தோடு ஜெய்பூருக்கு கொண்டு வரப்பட்டதாகத் தகவல். இந்த விக்ரஹத்தின் உண்மையான உடமைதாரர் ஸ்ரீல ரூபா கோஸ்வாமி. இவர் கடவுளுக்கு நிகரான கைதன்ய மகாபிரபுவின் சீடர் என்கிறார்கள்.

புராண ஆதாரங்களின் படி ஜெய்ப்பூரில் இருக்கும் கோவிந்த தேவ்ஜியை பஜ்ரக்ரித் என்றும் அழைக்கிறார்கள். காரணம், மகாபாரத கிருஷ்ணரின் கொள்ளுப் பேரனான பஜ்ரனபியால் உருவாக்கப்பட்ட சிலை என்பதால் அவரது பெயரை நினைவுறுத்தும் பொருட்டு பஜ்ரக்ரித் என்ற பெயரிலும் அழைத்து வழிபடுகிறார்கள். இந்தச் சிலையைச் செய்ய பஜ்ரனபி மிகுந்த சிரத்தை எடுத்துக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். பஜ்ரனபியின் தாயார்... அதாவது பிருந்தாவன கிருஷ்ணரின் மருமகள், தனது மாமனாரைப் பற்றி தத்ரூபமாக வர்ணிக்க, வர்ணிக்க அந்த வர்ணனையின் அழகில் கருத்தூன்றி கிருஷ்ணர் சிலையைச் செய்யத் தொடங்கி இருக்கிறார் பஜ்ரனபி. முதலில் அவர் செய்து கொண்டு வந்த சிலையில்... இதில் பாதம் மட்டுமே கிருஷ்ணரைப் போல இருக்கிறது என்று நிராகரித்தார் அவரது அம்மா, இரண்டாம் முறை செய்த சிலையில் மார்பு மட்டுமே கிருஷ்ணரைப் போல இருக்கிறது என்று நிராகரித்தார் அம்மா. மூன்றாவதாகச் செய்த சிலையில் மட்டுமே அத்தனை உறுப்புகளும் சாட்ஷாத் பிருந்தாவனக் கண்ணனைப் போன்றே இருக்கிறது எனப் பூரண மனதோடு ஒப்புக் கொண்டாராம் பஜ்ரனபியின் அம்மாவும் கிருஷ்ணரின் மருமகளுமான அந்தப் பெண்மணி.

இப்படித்தான் உருவாக்கப்பட்டிருக்கிறார் இந்த கோவிந்த தேவ்ஜி.

ஆக... மகாபாரத காலத்து கிருஷ்ணர் எப்படி இருந்தார் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் கொண்டவர்கள் ஜெய்ப்பூரில் இருக்கும் கோவிந்த தேவ்ஜி ஆலயத்திற்குச் சென்று வர நிச்சயம் ஒருமுறை மெனக்கெடலாம் என்று தோன்றுகிறது தானே?!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com