தொழில்நுட்பம்

புது மொபைல் ஃபோன் வாங்கப் போகிறீர்களா? இதோ சில டிப்ஸ்

தினமணி

மற்ற பொருட்களை வாங்குவது போல நமக்குப் பிடித்த ஒரு மொபைல் ஃபோனை  வாங்குவது அத்தனை சுலபம் அல்ல.ஆசை ஆசையாகத் தான் வாங்கியிருப்போம், ஆனால் ஏனோ திடீரெனப் பிடிக்காமல் போய்விடும். வாங்கிவிட்டபின் மாற்றவும் முடியாது. என்ன செய்யது? கடையிலோ இணைய தளத்திலோ தரமான எலக்ட்ரானிக் ஐட்டங்களை தேர்ந்தெடுப்பது செய்வது எப்படி?

விசாரித்து தெரிந்து கொள்ளவும்

எந்த பொருளை வாங்குவதாக இருந்தாலும் அது பற்றிய முழுமையான தகவல்களை நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பும் ஃபோனில் என்னென்ன வசதிகள் உள்ளன, அது உங்கள் பட்ஜெட்டுக்கு பொருத்தமாக உள்ளதா என்று முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள். அந்த ஃபோனைப் பற்றிய விமரிசனங்களை இணையத்தில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் அதே மொபைல் வைத்திருந்தால் அவர்களிடம் அதன் பயன்பாட்டைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும். தவிர உங்களுக்குப் பிடித்த பிராண்டையும் சந்தையில் கிடைக்கும் அனைத்துப் பிராண்டுகளுடன் ஒப்புமைப் படுத்திப் பார்த்தபின் வாங்குவது நல்லது.

ஆஃபர் வரும் வரை காத்திருக்கவும்

பண்டிகை காலத்தில் பலவிதமான ஆஃபர்களின் அணிவகுப்பு இருக்கும், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது முதல் பழைய ஃபோனுக்கு புதியது, ஆயிரம் ரூயாய் தள்ளுபடி என்பதிலிருந்து அதனுடன் இது ஃப்ரீ என்று விதவிதமான சிறப்பு சலுகைகள் கிடைக்கும். எனவே சலுகை விலையில் நமக்குத் தேவையான ஃபோனை வாங்கலாம்.

ஆன்லைனில் வாங்கும்போது 

மொபைலை ஆன்லைனில் வாங்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியது அது தரமான விற்பனைத் தளமா அல்லது ஊர் பெயர் தெரியாத நிறுவனமா என்பதுதான். சில சமயம் இந்த இணையதள விற்பனையாளர்கள் சலுகை விலையில் மொபைல் விலையை நிர்ணயிப்பார்கள். ஆனால் அது டெலிவரி ஆகாது. எத்தனை நாள் தான் காத்திருப்பது. இணையத்துக்குத் தகவல் அனுப்பினால் செல்லர் அனுப்பும்போது மொபைல் உடைந்துவிட்டது ஆர்டர் கேன்சல் என்று சொல்லிவிடுவார்கள். உங்கள் பணத்தை உங்கள் அக்கவுண்டுக்கு ஏழு நாட்களுக்குள் அனுப்பிவிடுவார்கள் என்றாலும் ஆசையாக புக் செய்த மொபைல் கைக்கு வந்து சேரவில்லை என்ற கோபம் உங்களுக்கு நிச்சயம் ஏற்படும். இதைத் தவிர்க்க இணையத்தில் வாங்காமல் நேரடியாகக் கடைக்குச் சென்று உங்களுக்கு பிடித்த மொபைலின் அத்தனை அம்சங்களையும் சரி பார்த்து வாங்கிக் கொள்வது சாலச் சிறந்தது.

உங்களுக்கு எந்தவிதமான பயன்பாடு என்பதைப் பொருத்து மொபைல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். தேவையில்லாமல் பணம் கொடுத்து ஹையர் எண்ட் ஃபோன் வாங்கிவிட்டு அதைப் பயன்படுத்தாமல் வைத்திருப்பது வீண். 

புது மொபைல் வாங்கிய உடன் அதை எத்தனை மணி நேரம் சார்ஜில் போடுவது என்பதிலிருந்து சிக் கார்ட் பயன்பாடுகளையும் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். ஹெட் செட், சார்ஜர், டெம்பர் க்ளாஸ், மொபைல் கவர், பவர் பேங்க் என தேவைப்படும் மொபைல் ஆக்ஸசரிஸ் அனைத்தையும் மொபைல் வாங்கும்போதே சேர்த்து வாங்கிவிடுவது நலம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக ஆட்சியில் செய்யாறு தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள்: முக்கூா் என். சுப்பிரமணியன்

ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர சிறுவா், சிறுமிகள் விண்ணப்பிக்கலாம்

கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

ஆரணி பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

SCROLL FOR NEXT