நிதி உதவி வேண்டுமா? உங்களுக்கு என்னென்ன தேவையோ அவை எல்லாமும் அதற்கு மேலும் இவற்றில் கிடைக்கும்!

சமீப காலங்களை ஆப்களின் காலம் என்றே சொல்லலாம். முன்பெல்லாம் நம்மை தினமும் காலையில் எழுப்பி விட, ஒரு வட்ட வடிவ டேபிள் க்ளாக் இருக்கும்.
நிதி உதவி வேண்டுமா? உங்களுக்கு என்னென்ன தேவையோ அவை எல்லாமும் அதற்கு மேலும் இவற்றில் கிடைக்கும்!

சமீப காலங்களை ஆப்களின் காலம் என்றே சொல்லலாம். முன்பெல்லாம் நம்மை தினமும் காலையில் எழுப்பி விட, ஒரு வட்ட வடிவ டேபிள் க்ளாக் இருக்கும். அதில் பெரிய முள் சிறிய முள் இரண்டையும் ஒருவழியாக திருக்கி, அலாரம் வைத்து அது அடிக்க அடிக்க அணைத்து எப்படியோ ஒருவழியாக கண் விழிப்போம். கால மாற்றத்தின் விளைவாக இப்போது துயில் எழ மட்டுமல்லாமல் உடற்பயிற்சி செய்ய, சரியான அளவு தண்ணீர் குடிக்க, மாதவிலக்கு தினங்களை ட்ராக் செய்ய, உடற்பயிற்சி செய்ய, கார் புக் பண்ண என்று எதற்கெடுத்தாலும் ஆப், ஆப் என ஆப்களால் சூழ்ந்த உலகத்தில் வாழ்கிறோம்.

ஆண்டவா இதையெல்லாம் கேட்க நீ எங்கே தான் இருக்கிறாய் என்று தேடிப் பார்க்க ஒரு ஆப் நம் போனிலிருந்து இங்கே தான் உள்ளேன் என்று பதில் சொல்கிறது. ஆம் கோவிந்தா என்று ஒரு ஆப்பில் சாட்சாத் ஏழுமலையானை கண்டு அடைய நீங்கள் பயன்படுத்தலாம். அப்பப்பா எத்தனை எத்தனை ஆப்கள் என்று வியந்து போகிறீர்களா, அல்லது டெக்னாலஜி கடவுள் உண்மையில் அளித்த வரமா என்பதெல்லாம் ஆராய்ச்சி செய்த பின்னரே முடிவு செய்ய வேண்டும். அதற்கு முன் இந்த மாய எதார்த்த ஆப்களின் உலகத்தில் சமீபத்தில் வந்து இறங்கியுள்ள சில பயனுள்ள ஆப்களைப் பற்றி இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 

பாடம் படிக்க உதவும் ஆப் இது (Anatomy Learning 3D Atlas)

உடற்கூறுயியல் சொல்லித் தருகிறது இந்த ஆப். 3Dயில் செரிமான அமைப்பு, இதயம் செயல்படும் விதம் உள்ளிட்ட பலவற்றை இந்த ஆப் மூலம் கற்றுக் கொள்ளலாம். இந்த செயலியின் மூலம் உயிரியல் படிக்கும் மாணவர்களுக்கு குறிப்பாக மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஆப் இது. எலும்பு நரம்பு மஜ்ஜைகள் என ரத்தமும் சதையுமாக மனித உடலை ஒரு ஆசிரியர் போலக் கற்றுத் தருகிறது இந்த அற்புதமான ஆப்.

வேடிக்கையாக வேதியியல் கற்க (Chemistry Lab)

வேதியலை விளையாட்டாகக் கற்றுக் கொள்ள ஆசையா? உடனே இந்த ஆப்பை தரவிறக்கம் செய்துவிடுங்கள். இந்த செயலி மிக எளிமையாக கெமிஸ்ட்ரி கற்றுத் தருகிறது. ஒரு ஆக்ஸிஜன் அணு, இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் சேர்ந்தது நீரின் மூலக்கூறு என மனனம் செய்வதை விடவும் அந்த அணுக்களைச் சேர்த்து நீர்த்துளி உருவாக்கினால் எப்படி இருக்கும்? அதைத்தான் செய்து காட்டுகிறது இந்தச் செயலி. மீத்தேன், ஈத்தேன் இனி பிரச்னையில்லை. படித்தேன் முடித்தேன் என மாணவர்கள் ஈஸியாக பாஸ் ஆகலாம்.

மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும் ஆப்

இ-சைக்ளினிக் டாட் காம் என்ற நிறுவனத்தினர் தன்னம்பிக்கை வளர்த்தெடுக்கும் ஒரு ஆப் ஒன்றினை உருவாக்கியுள்ளார்கள். இந்த ஆப் தரவிறக்கம் செய்து பயன்படுத்தினால் ஸ்ட்ரெஸ் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்னைகளிலிருந்தும் விடுபட்டு மன அமைதியுடன் திகழலாம் என்று உறுதி கூறுகிறது ஆப்பைத் தயாரித்த டெக்னிகல் டீம்.  இந்த ஆப்பின் தீம் என்னவெனில் ‘ஐ வில்’ அதாவது ‘என்னால் முடியும்’ என்பதே. எதையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தை வளர்த்தெடுப்பதே இந்த ஆப்பின் முக்கிய பணி. சட்டென்று உணர்ச்சி வசப்படுதல், கோபம் வந்து உச்ச குரலில் கத்துதல், உயர் ரத்த அழுத்த பாதிப்புக்களுக்குள் சிக்குதல் போன்ற பிரச்னைகளிலிருந்து விடுபட இந்த ஆப் மிகவும் பயன்படும். இவைத் தவிர இந்த ஆப் ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேவைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

ஆரோக்கிய வாழ்க்கைக்கு இந்த ஆப் உதவும்

எந்த உணவு எதற்காக என்பதே நம்மில் பெரும்பாலும் யாருக்கும் தெரிவதில்லலி. உணவே மருந்தாக இருந்த காலம் மலையேறி மருந்தே உணவாகிவிட்ட நிலை உருவாகிவிட்டது. நம் தேவையை இந்த ஆப்பிடம் சொன்னால் போதும். டிப்ஸ்களை வழங்கிக் குவித்துவிடும். சர்க்கரை வியாதியை கட்டுப்பாட்டில் வைக்க, உடல் எடையைக் குறைக்க என பல கேள்விகளுக்கு பக்குவமாக பதில் அளிக்கிறது இந்த ஆப். தரவிறக்கம் செய்ய goo.gl/Jtd6Cr என்று உங்கள் மொபைலைலில் தேடுங்கள்.

நிதி உதவி வேண்டுமா?

தினசரி வரவு செலவு கணக்குகளை மெயிண்டெய்ன் செய்ய இந்த ஆப் உதவும். அந்த ஆப்பை டவுன்லோட் செய்து அன்றாடம் நீங்கள் செய்த செலவுகளை அதில் பதிவிட்டு கணக்கு வைத்துக் கொள்ளலாம். தினந்தோறும் செய்யும் செலவுகளான உணவு, பொருட்கள் வாங்குவது, பெட்ரோல் போடுவது, சினிமா என என்ன செலவு செய்தாலும் தனித்தனியாக பதிவிட வசதி உள்ளது. நாள், வாரம்,மாதம் என பிரிவும் உண்டு. சாப்பாட்டுக்கா இவ்வளவு செலவு செய்தேன் என்று நீங்கள் அதிகம் செலவு செய்யும் விஷயங்களை அடுத்த தடவை குறைத்துக் கொள்ள முடியும். நெட் கனெக்‌ஷன் இல்லாத சமயங்களிலும் இந்த ஆப்பை பயன்படுத்தலாம் என்பது இதன் கூடுதல் சிறப்பு. goo.gl/8qUcgb

மேற்சொன்ன செயலிகளை ஆண்ட்ராய்ட் வசதி உள்ள செல்ஃபோன்களில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com