தொழில்நுட்பம்

புத்தம் புது வசதிகளை அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ் அப்!

தினமணி

மக்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களைச் செய்துவரும் வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது மேலும் பல புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.

வழக்கமாக வாட்ஸ் அப்பில் வரும் தகவல்களுக்குப் பதிலளிக்க நாம் அந்தத் தகவலை சிறிது நேரம் கிளிக் செய்து பதிலளிக்க வேண்டியிருக்கும். தற்போது இந்த புதிய வசதியின் மூலம் அந்தத் தகவலை வலதுபுறம் ஸ்வைப் செய்தாலே போதும். அதற்குரிய பதிலை நாம் அனுப்பலாம். இதன் மூலம் நேரம் மிச்சமாகும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல், இருளில் வாட்ஸ் அப் பயன்படுத்துவதால் அதிக வெளிச்சம் கண்களைப் பாதிப்பதாகக் கூறப்படுகிறது. இதைத் தடுக்க வாட்ஸ் அப் திரையில் 'டார்க் மோட்' எனும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறைவான வெளிச்சம், இருள் சூழ்ந்த பகுதிகளில் இந்தத் திரையை தேர்வு செய்து கண்களைப் பாதுகாத்து கொள்ளலாம்.

மேலும், வாட்ஸ் அப் சாட்டில் வெளியில் இருந்து ஸ்டிக்கர்களைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வசதியும் அறிமுகமாகி உள்ளது. இதேபோல், வாட்ஸ் அப்பில் பகிரப்பட்ட யூ டியூப், ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் வீடியோ லிங்குகளை வாட்ஸ் அப் பக்கத்தில் இருந்து வெளியே செல்லாமல் அங்கேயே பார்க்கும் புதிய வசதியும் அறிமுகமாகி உள்ளது.

விடியோ லிங்குகள் உள்ள பக்கத்தில் இருந்து வேறு பக்கத்துக்குச் சென்றுவிட்டால், விடியோ நின்றுவிடும். இந்த சேவைகள் அனைத்தையும் பெற வாட்ஸ் அப் பீட்டா 2:18:301 வெர்ஷனுக்கு அப்கிரேட் செய்து கொள்ள வேண்டும்.
- அ.சர்ஃப்ராஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காா்த்தி சிதம்பரத்தின் கடவுச்சீட்டை 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க உத்தரவு

திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் நாளை பிரசாரம்

வி.வி. பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்

கட்டாரிமங்கலம் கோயிலில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை

மெட்ரோ பணி: நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

SCROLL FOR NEXT