தொழில்நுட்பம்

170 நாட்களில் 100 மில்லியன் வாடிக்கையாளர்களா! ஜியோவின் இரண்டாண்டு சாதனைப் பட்டியல்!

தினமணி

ஜியோவின் வலையமைப்பு என்பது, 800 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 2300 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட்களில் வழங்கப்படும் LTE ஸ்பெக்ட்ரம் கொண்ட அதிநவீன அனைத்து ஐP வலையமைப்பு ஆகும். ஜியோவிற்கு, இந்தியாவில் வேறு எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தையும்விட மிகவும் அதிக, மிகவும் பரந்த அளவில் LTE கவரேஜ் உள்ளது. ஜியோவின் வலையமைப்பு விரைவில் இந்தியாவின் மக்கள் தொகையில் 99 சதவிகிதத்தை விரைவில் அடையக்கூடும். ஜியோவின் முயற்சியால் கடந்த 25 ஆண்டுகளில், 2ஜி கவரேஜை விட 4ஜி கவரேஜ் அமைப்பை இந்தியா அடைந்துள்ளது. இந்தியாவில் இலவச குரலொலி சேவையை உண்மையாகியுள்ளது. ஜியோ தனது அனைத்து கட்டணத் திட்டங்களுடன் வரம்பற்ற இலவச அழைப்பை கொடுத்தது.  

இந்தியாவில் மொபைல் டேட்டா நுகர்வு, ஒரு மாதத்திற்கு 20 கோடியிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு 370 கோடிக்கு உயர்ந்துள்ளது. அந்த தரவில் ஜியோ நுகர்வோhர்கள் மட்டும் கிட்டத்தட்ட 240 கோடி ஜிபி நுகர்கின்றனர். மொபைல் தரவு நுகர்வு பொறுத்தவரை, இந்தியா அகலக்கற்றை ஊடுருவிலில் உலகில் 155-வது இடத்திலிருந்து உலகில் 1-வது இடத்திற்கு சென்றுள்ளது. அது தொடங்கப்பட்ட மாதங்களுக்குள் உலகின் நம்பர் 1-ஆக ஆகியது மற்றும் ஜியோவின் வலையமைப்பில் அனுப்பப்பட்ட தரவு ஒரு மாதத்தில் 100 கோடி ஜிபியை கடந்த ஒரே எக்ஸாபைட் தொலைத்தொடர்பு வலையமைப்பு இதுவாகும்.

உலகில் வேறு எந்த தொழில்நுட்ப நிறுவனத்தைவிட மிகவும் வேகமாக சந்தாதாரர்களை பெற்ற பெருமை ஜியோவுக்கு உண்டு. ஒவ்வொரு நொடியிலும் ஏழு வாடிக்கையாளர்களை சேர்த்து வெறும் 170 நாட்களில் 100 மில்லியன் வாடிக்கையாளர்களை அடைந்த நிறுவனம் ஜியோவாகும். இன்று 215 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் (2018 ஜூன் 30ம் தேதியில் உள்ள படி) ஜியோ வலையமைப்பில் டிஜிட்டல் வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்கள்.

ஒரு ஜிபி தரவு ரூ.250 - ரூ.10,000 வரை தரவு கட்டணம் உள்ள நிலையில், ஜியோ தொடங்கப்பட்ட பிறகு அதன் கட்டணம் தற்போது ஒரு ஜிபி ரூ. 15க்கும் குறைவாக சரிவடைந்திருக்கிறது. ஜியோ பயனாளிகள் பல்வேறு திட்டங்களில் அதைவிட குறைவாக செலுத்துகின்றனர்.

இந்தியாவில் தொலைத்தொடர்பு வலையமைப்புகளின் தரத்தை அதிகாரபூர்வமாக கண்காணிக்கக்கூடிய வேகப் பரிசோதனை போர்டலானது, கவரேஜ், பயன்பாடு மற்றும் தரவு வேகத்தில் 4ஜி வலையமைப்பு முதலிடம் வகிக்கும் நிறுவனம் என மாதத்திற்கு மாதம் தொடர்ந்து அறிவித்துள்ளது.

ஜியோவிற்கு முன்பு கிட்டத்தட்ட 22,000 கட்டண திட்டங்கள் ஆஃபரில் இருந்தன. ஜியோவிற்குப் பிறகு அனைத்து ஆபரேட்டர்களும் ஆஃபர் திட்டங்களை குறைத்து ஜியோ மாடலை பின்பற்ற முயலுகின்றன. ஜியோ, எந்த நேரத்திலும் ஏற்புடைய குறிப்பிட்ட திட்டங்களுடன் ஒரு சில எளிய கட்டண திட்டங்களையே வழங்குகிறது. இது பயனர்களுக்கு வசதியாக இருந்தது. மேலு, அவரவருக்கு பிடித்த சிறப்பான திட்டங்களை தாங்களாகவே  தேர்வு செய்ய முடிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களை நம்பித்தான் தோ்தலில் நிற்கிறோம் -சீமான்

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலி

காரைக்கால் அம்மையாருக்கு குருபூஜை

கண்ணன் அலங்காரத்தில் மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT