எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பிளஸ், மைனஸ் என்ன? அவை வொர்த்தா இல்லையா?

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் என்னை ஈர்த்த அம்சம். அதன் டேஷ்போர்ட். இந்த வகை ஸ்கூட்டர்களை வாங்கி விட்டால் போதும் இனி ரூட் பார்க்க மொபைல் ஃபோனை வெளியில் எடுக்கத் தேவையே இருக்காது
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பிளஸ், மைனஸ் என்ன? அவை வொர்த்தா இல்லையா?

இணையத்தில் Ather என்றொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைப் பார்த்தேன். பார்க்க படு ஸ்மார்ட் டிஸைனாகத் தெரிகிறது. ஆனால், என்ன ஒரு கஷ்டம் என்றால் வெஸ்பா, ஆக்டிவா போல இதிலும் கால் வைக்கும் இடத்தில் இடம் மிகக் குறைவு. ‘நீ என்ன மளிகைக் கடை வைத்திருக்கிறாயா? காய்கறி, மளிகைச் சாமான் லோட் அடைத்து காலடியில் வைத்துக் கொண்டு வர இடப் பற்றாக்குறை என்பது போல குறைபட்டுக் கொள்கிறாயே’ என்றாள் தங்கை. அப்படி இல்லை. குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வரும் போது ஸ்கூல் பேக் வைக்கவாவது இடம் வேண்டுமில்லையா? அது இந்த வண்டியில் மிஸ்ஸிங். ஆனால், பார்க்க பாந்தமாக இருக்கிறது. இந்த் மாடல் வண்டிகள் இன்னும் சென்னைக்கு வரவில்லை. பெங்களூரில் கிடைக்கிறது. ஆன் ரோட் ப்ரைஸ் ரூ 1,11,230 முதல் 1,23,230 வரை இரு என வேறு விலைகளை நிர்ணயித்திருக்கிறார்கள். இதில் விலை வேறுபாட்டுக்கு காரணம், வீட்டிலேயே ஸ்கூட்டரைச் சார்ஜ் செய்து கொள்வதென்றால் அதற்கான ஹோம் சார்ஜிங் பாயிண்ட்டை அவர்களே அமைத்துத் தருகிறார்கள். இல்லை எங்களுக்கு அதெல்லாம் வேண்டாம், சார்ஜிங் கேபிள் மட்டும் போதும் நாங்கள் பப்ளிக் சார்ஜிங் பாயிண்டுகள் எங்கு வேண்டுமானாலும் தேவைக்கேற்ப சார்ஜ் செய்து கொள்கிறோம் என்றால் அதற்கேற்ப விலையில் 10,000 ரூபாய் குறைக்கப்படுகிறது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் என்னை ஈர்த்த அம்சம். அதன் டேஷ்போர்ட். இந்த வகை ஸ்கூட்டர்களை வாங்கி விட்டால் போதும் இனி ரூட் பார்க்க மொபைல் ஃபோனை வெளியில் எடுக்கத் தேவையே இருக்காது. எல்லாம் டேஷ்போர்டில் டிஸ்பிளே ஆகும் விதத்தில் செட் செய்து கொள்ளலாம். அதனால் தான் இதன் பெயர் இண்டராக்டிவ் டேஷ் போர்ட் போல. அதோடு அதி விரைவாகச் செல்லும் போது மணிக்கு 80 கிமீ தூரத்தையும், குறைந்த ஸ்பீடில் செல்லும் போது மணிக்கு 35 கிமீ தூரத்தையும் கடக்க வல்லது இந்த ஸ்கூட்டர். நார்மல் ரேஞ்ச் என்றால் மணிக்கு 55 முதல் 75 கிமீ வேகம் வரை செல்ல இயலும். நமது மொபைல் ஃபோனில் Ather App ஐ டவுன்லோட் செய்து வைத்துக் கொண்டால் ஸ்கூட்டரில் சார்ஜ் எவ்வளவு மீந்திருக்கிறது என்று உடனடியாகத் தெரிந்து கொள்ள முடியும். அத்துடன் ட்ரைவிங்கில் இம்ப்ரூவ்மெண்ட் தேவைப்பட்டாலும் சரி அந்த ஆப் மூலமாக பரிந்துரைகளை பெற்றுக் கொள்ளும் விதமாக வாகனம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆப் மூலமாக நமது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஓடுதிறனை மட்டுமல்ல, அதை நாம் எவ்வாறு மேம்படுத்துவது என்பதற்கான டிப்ஸ்களையும் நாம் பெற முடியும்.

மார்கெட்ல புது ஸ்கூட்டர் இண்ட்ரடியூஸ் பண்றாங்கன்னா... இப்படித்தான் ஏகப்பட்ட ஆப்ஷன்களோடு கொண்டு வருவாங்க. ஆனா, அதுல யூஸர் ஃப்ரெண்ட்லியா என்னலாம் இருக்குங்கறது தான் நமக்கு முக்கியம்.

இந்த எலெக்டிரிக் ஸ்கூட்டரைப் பொருத்தவரை என்னை ஈர்க்கும் விஷயம் என்றால் அதன் இண்டராக்டிவ் டேஷ் போர்டும், சார்ஜிங் பாயின்ட்டும் தான். அது தவிர சர்வீஸ் அதிகமாக தேவைப்படாது. தேவைப்பட்டால் நாம் வழக்கம் போல ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு சர்வீஸ் செண்ட்டரிலோ அல்லது மெக்கானிக் ஷாப்பிலோ விட்டு விட்டு மீண்டும் வண்டி கிடைக்கும் வரை காத்திருக்கத் தேவையில்லை. தேவைப்பட்டால் சர்வீஸ் ஆட்கள் வீடு தேடி வந்து சர்வீஸ் செய்து கொடுத்து விட்டுப் போவார்கள். என்பதை இந்த ஸ்கூட்டரின் வசதியான அம்சங்களில் ஒன்றாக நான் கருதுகிறேன்.

எல்லாம் தாண்டி கடைசியாக வாகனத்தின் விலை மேனுவல் ஸ்கூட்டர்களைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமாக இருப்பதுக் கூட கொஞ்சம் உறுத்துகிறது.

சிலருக்கு விலை கட்டுப்படியாகாது போலத் தோன்றலாம்.

கட்டக் கடைசியாக ஒரு சந்தேகம். இதுவரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பயன்படுத்தியவர்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

தற்போது இரு சக்கர வாகன மார்கெட்டுகளில் கிடைக்கும் ஆட்டோமேடிக் அல்லது கிக் ஸ்டார்டிங் ஸ்கூட்டர்களைக் காட்டிலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பலன் அதிகமா?

டி வி எஸ் ஸ்ட்ரீக், ஹோண்டா ஆக்டிவா, சுஸுகி ஜூபிட்டர் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களை இந்த வகை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நோக்கிச் திரும்பச் செய்யும் அளவுக்கு இதில் ஏதாவது அட்வான்ஸ் ஆப்ஷன்கள் இருக்கின்றனவா?

அப்படி ஏதும் இல்லையெனில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விரும்பி வாங்குபவர்களை ஈர்க்கும் அம்சம் என அதில் என்ன இருக்கிறது?

இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்க முயற்சியுங்கள். சும்மா ஒரு பொது அறிவுக்காகத் தான். மக்கள் ஏன் அவற்றை விரும்புகிறார்கள்? அல்லது புறக்கணிக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமில்லையா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com