வீட்டுப் பராமரிப்பில் நம்மை டென்சனில் தள்ளும் சில விடாப்பிடிக் கறைகளை நீக்கச் சில எளிய வழிகள்!

கோகோ கோலா இருந்தால் அதில் சூயிங்கம் ஒட்டிக் கொண்ட இடத்தில் குளிரத் தேய்த்து ஊற விடுங்கள். நிமிடத்தில் சூயிங்கத்தை எளிதாகப் பிரித்தெடுத்து விடலாம்.
வீட்டுப் பராமரிப்பில் நம்மை டென்சனில் தள்ளும் சில விடாப்பிடிக் கறைகளை நீக்கச் சில எளிய வழிகள்!

கோகோ கோலா  கொண்டு சில விடாப்பிடி கறைகளை அகற்றும் முறை...

  • தலைமுடியில் சூயிங்கம் ஒட்டிக் கொண்டால் அதை பிரித்தெடுப்பது எத்தனை சிரமம் என்று எல்லோருக்கும் தெரியும். மிக எரிச்சலை உண்டாக்கக் கூடிய அச்சமயத்தில் வீட்டில் கோகோ கோலா இருந்தால் அதில் சூயிங்கம் ஒட்டிக் கொண்ட இடத்தில் குளிரத் தேய்த்து ஊற விடுங்கள். நிமிடத்தில் சூயிங்கத்தை எளிதாகப் பிரித்தெடுத்து விடலாம்.
  • பாலோ, காஃபீயோ ஊற்றி வைத்த ஃப்ளாஸ்கை கழுவ மறந்து விட்டீர்களா? அடடா, ஃபிளாஸ்க்கின் உட்புறத்தில் காய்ந்து போன கஃபீ & டீ மிச்சங்கள் அப்படியே உறைந்து ஒட்டிக் கொண்டு எத்தனை தேய்த்துக் கழுவினாலும் நீக்க முடியாத பிடிவாதக் கரையாகி வலுவாக ஒட்டிக் கொள்ளும். அதற்கும் கோகோ கோலா தான் தீர்வு, கரை மூழுகுமாறு கோகோ கோலாவை ஊற்றி சில நிமிடங்கள் ஊற வைத்து பிறகு தேய்த்துக் கழுவினீர்கள் எனில் ஃபிளாஸ்க்கின் உட்புறம் பளிச்சென மின்னும்.
  • வீட்டு டாய்லெட் பீங்கான் கோப்பையில் விடாப்பிடி மஞ்சள் கறை படிந்து போவேனா என்கிறதா? அதற்கும் கோகோகோலா அருமருந்து. கோலாவை கோப்பையின் உள்ளே அப்ளை செய்து 5 நிமிடங்கள் கழித்து ஃபிளஷ் அவுட் செய்தால் போதும் அப்புறம் கறை போயே போச்சு!
  • வீட்டில் இருக்கும் ஸ்பேனர், ஸ்க்ரூ டிரைவர், கத்தரி உள்ளிட்ட உபகரணங்கள் துருப்பிடித்துப் பார்க்க அவலட்சணமாக இருக்கிறதா? உடனே எடுங்கள் கோகோ கோலாவை, குறிப்பிட்ட உபகரணங்களை கோலாவில் ஊற வைத்து பிறகு டிஷ்வாஸர் கொண்டு தேய்த்துக் கழுவினால் உபகரணங்கள் புத்தம் புதிது போலப் பளிச்சென மின்னத் தொடங்கி விடும்.

டீ பாத்திரம் அடிப்பிடித்து தீய்ந்து அடிப்பிடித்தால் கறை நீக்குவது எப்படி?

டீ பாத்திரம் தீய்ந்து அடிப்பிடித்து காய்ந்த பின்னால் அதை சுத்தம் செய்வது படு கஷ்டம். அம்மாதிரியான சூழலில் டீ பாத்திரத்தில் கறை முங்குமாறு தண்ணீர் ஊற்றி அதை கொதிக்க விட்டு இறக்கி அதன் மீது டிஷ்யூ பேப்பரைப் போட்டு மூழ்க விட்டுப் பின் துடைத்து எடுத்தால், தேய்த்துக் கழுவ வேண்டிய அவசியமில்லாமல் கறை சுத்தமாகக் கழன்று வந்து டிஷ்யூ பேப்பரில் ஒட்டிக் கொள்ளும். 

சுவர் மட்டும் வீட்டுத் தரையில் குழந்தைகளின் கிறுக்கல் கறைகளை நீக்குவது எப்படி?

சுவர், ஷோபாக்கள் மற்றும் தரைகளில் குழந்தைகள் பென்சில், ஸ்கெட்ச், பேனா, மார்க்கர் கொண்டு கிறுக்கினால் அவற்றைச் சுத்தமாகத் துடைத்து அழிப்பது மிகச்சிரமமான காரியம். இதற்கென WD 40 என்ற திரவ அழிப்பானைப் பயன்படுத்தலாம். ஜெர்மானியத் தயாரிப்பான இந்த கறை நீக்கி திரவ அழிப்பான் இந்தியாவிலும் தற்போது கிடைக்கிறது. பிடிலைட் நிறுவனத்துடன் கூட்டு வைத்துள்ள இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் பிடிலைட்டுடன் இணைந்து கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தினால் கறைகளைப் பற்றிய கவலையின்றி இருக்கலாம். (WD - Water DIsplacement)

  • இந்த WD 40 கொண்டு ஷூ கால்களால் அழுத்தி மிதிக்கப்பட்டு கார்பெட்டில் ஒட்டிக் கொண்ட சூயிங்கம் கறைகளைக் கூட சுத்தமாகத் துடைத்தெடுக்க முடியும்.

காய்கறி நறுக்கப் பயன்படும் மூங்கில் பலகையை துர்நாற்றமும், கறைகளும் இன்றி சுத்தம் செய்வது எப்படி?

  • எலுமிச்சம் பழத்தை நறுக்கி அரைப்பழத்தை பிழிந்து மூங்கில் பலகை மேல் தடவவும், அதன் மீது பரவலாகத் தூள் உப்பைத் தூவி நன்றாக ஸ்கிரப் செய்து கழுவினால் பலகையில் உள்ள துர்நாற்றமும், கறைகளும் போயே போச்சு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com