இந்தியாவில் நீங்கள் தவறவிடக்கூடாத 25 நீர்வீழ்ச்சிகள்!

இந்திய அருவிகள் அழகுக்காக மட்டுமல்ல அவற்றின் மூலிகைத் தன்மை வாய்ந்த மருத்துவ குணங்களுக்காகவும் அயல்நாட்டோரால் பெரிதும் விரும்பப்படக்கூடிய மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களாகத் திகழ்பவை.
இந்தியாவில் நீங்கள் தவறவிடக்கூடாத 25 நீர்வீழ்ச்சிகள்!

இந்தியா மலைகளும், அருவிகளும், பச்சைக் கம்பளம் விரித்தாற் போன்ற பசும்புல்வெளிகளும் நிறைந்த நாடு. இந்திய அருவிகள் அழகுக்காக மட்டுமல்ல அவற்றின் மூலிகைத் தன்மை வாய்ந்த மருத்துவ குணங்களுக்காகவும் அயல்நாட்டோரால் பெரிதும் விரும்பப்படக்கூடிய மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களாகத் திகழ்பவை. நம் நாட்டில் ஏராளமான அருவிகள் இருப்பினும் அவற்றுள் மிகச்சிறந்தவை என பட்டியலிடப்பட்டுள்ள 25 அருவிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். விடுமுறை நாட்களை அருவிகளை மையமாக வைத்து திட்டமிட இந்த லிஸ்ட் உதவலாம்.

1. துத்சாகர் நீர்வீழ்ச்சி, கோவா


பாற்கடல் நீர்வீழ்ச்சி, மலை உச்சியில் சுமார் 320 மீட்டர் உயரத்திலிருந்து இந்த அருவி பிரம்மாண்ட காட்டாறு போலப் பொங்கிப் பிரவகித்து வழிந்து வரும் காட்சி பாற்கடலை நினைவுறுத்துவதால் தான் இதற்கு துத்சாகர் நீர்வீழ்ச்சி என்று பெயரானது. இந்தியில் தூத் என்றால் பால் என்று பொருள், துத்சாகர் என்றால் அது பாற்கடலைக் குறிக்கிறது.

2. ஜோக் நீர்வீழ்ச்சி, கர்நாடகா


ஷராவதி ஆற்றின் மீது அமைந்திருக்கும் இந்த அற்புதமான நீர்வீழ்ச்சி மலைமீது 253 மீட்டர் உயரத்தில் உள்ளது. முற்றிலும் கர்நாடகாவின் பசுமை வாய்ந்த பள்ளத்தாக்குகளின் மீது அமைத்துள்ள இந்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிடுவது இயற்கையுடன் இயைந்த ஒரு அற்புதமான அனுபவத்தைத் தரக்கூடியதாக அமையும்.

3.  ஹெப்பி நீர்வீழ்ச்சி, கர்நாடகா


168 மீட்டர் உயரத்திலிருந்து இந்த அருவி வழிந்து வரும் காட்சி பார்க்கப் பார்க்கக் கண்களுக்கு தெவிட்டாத இன்பம் தரக்கூடியது. அதுமட்டுமல்ல சுற்றிலும் பசுமையான காட்சிகளுடன் இந்த அருவியைக் காண்பது என்பது வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத அற்புதமான அனுபவங்களைத் தரக்கூடியது.

4. சிவனசமுத்திர நீர்வீழ்ச்சி, கர்நாடகா


கர்நாடகத்தில் காவிரி சிவனசமுத்திர அருவியாக எழுச்சி கொண்டு பாய்ந்து வரும் காட்சி இயற்கை ஆர்வலர்களால் மிகுந்த ரசனைக்குரிய அனுபவமாகக் கருதப்படுகிறது. 

5. நொக்கலிகை நீர்வீழ்ச்சி, மேகாலயா


340 மீட்டர் உயரத்தில் இருந்து பாய்ந்து வருவதால் இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சியாக இது கருதப்படுகிறது. இந்த இடத்தின் அமைதி எந்தவொரு ஆத்மாவையும் சமாதானப்படுத்தக் கூடியது..

6. கின்ரேம் நீர்வீழ்ச்சி, மேகாலயா


இந்த அருவியைப் பார்வையிட உங்களுக்கு ஒரு முழுநால் தேவைப்படலாம். 305 மீட்டர் உயரத்திலிருந்து ஓடி வரும் இந்த அருவி தங்கரங் பூங்காவினருகில் பூமியைத் தொடுகிறது.

7. சூச்சிப்பாரா நீர்வீழ்ச்சி, கேரளா


இலையுதிர் மற்றும் பசுமையான காடுகளின் மத்தியில் மூன்றடுக்குகளாக அமைந்திருக்கும் மூன்று நீளமான நீர்வீழ்ச்சி இது. அதன் உண்மையான அழகு, பெருமை, அமைதி அனைத்துமே இயற்கையின் மடியில் பாந்தமாக அது அமைந்துள்ள விதத்தையே சார்ந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

8. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, கேரளா


இந்தியாவின் நயாகராவாகக் கருதப்படும் அருவி இது. தேவதைக் கதைகளில் இடம்பெறுவது போன்ற அருவித் தோற்றம் இருப்பதால் இங்கு பாலிவுட் படப்பிடிப்புகள் அதிகம் நடைபெறும்.

9. கெம்ப்டி நீர்வீழ்ச்சி, உத்தரகாண்ட்


முஸோரியின் வளர்ந்து வரும் சுற்றுலாத் தளமான இந்த அருவி நிச்சயம் பார்க்கப்பட வேண்டிய இடங்களில் ஒன்று. அருவியிலிருந்து வழிந்து வரும் வெள்ளிநீர் ஒவ்வொரு பருவத்திற்கும் ஒரு மாயஜாலம் காட்டத்தக்க அபூர்வ அழகு கொண்டது.

10. பாக்சுனாக் நீர்வீழ்ச்சி, ஹிமாச்சலப் பிரதேசம்


ஹிமாச்சலப் பிரதேசத்தின் மிக அழகான நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. 

11. சிஸு நீர்வீழ்ச்சி, ஹிமாச்சலப் பிரதேசம்


ஹிமாச்சலப் பிரதேசத்தின் பரந்து பட்ட பசுஞ்சமவெளியினூடான பரந்து பட்ட வானுயர்ந்த மலைகளுக்குப் போட்டியாக தவறவே விடக்கூடாத வைரம் போன்ற ஜொலிப்பில் சுடர் விடுகிறது சிஸு நீர்வீழ்ச்சி. 

12. சத்தாரா நீர்வீழ்ச்சி, ஹிமாச்சலப் பிரதேசம்


ஏழு சிற்றருவிகள் ஒன்றிணையும் இடத்தில் உதயமாகிறது சத்தாரா நீர்வீழ்ச்சி. தனித்தனியாக மலையிறங்கும் முனைப்பில் இருக்கும் ஏழு சிற்றாறுகளும் ஓரிடத்தில் முயங்கிக் கலந்து பிரம்மாண்ட சத்தாராவாகி பூமியை நோக்கி எல்லையில்லா உவகையுடன் பாய்ந்து தாழ்ந்து பணிந்து முத்தமிடுவது போல இறங்கும் பாவனை சத்தாராவை இயற்கை விரும்பிகளின் காதலியாக்கி இருக்கிறது.

13. ருத்ர நாக நீர்வீழ்ச்சி, ஹிமாச்சலப் பிரதேசம்

14. துயாந்தர் நீர்வீழ்ச்சி, மத்தியப்பிரதேசம்


மார்கழி மாதப் பனிப்பொழிவு போல சுற்றிலும் பனிப்புகை சூழ மத்தியப் பிரதேசத்தின் நர்மதா நதி மீது வந்து சங்கமிக்கும் துயாந்தர் நீர்வீழ்ச்சிக்கு ஒரு முறை சென்று விட்டால் மீண்டும் மீண்டும் நம்மை வரச்சொல்லித் தூண்டும் வனப்பு மிக்க சுற்றுலாத்தலமாகத் திகழ்கிறது.

15. பிம்லட் நீர்வீழ்ச்சி, ராஜஸ்தான்

60 மீட்டர் உயரத்திலிருந்து பூமியைத் தழுவும் பிம்லட் நீர்வீழ்ச்சி ராஜஸ்தானத்தின் தார் பாலைவனச் சூட்டைத் தணிப்பதில் அங்குள்ள சுற்றுலா வாசிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகத் திகழ்கிறது.

16. குற்றால நீர்வீழ்ச்சி, தமிழ்நாடு
குற்றாலத்தில் 167 அடி உயரத்திலிருந்து பல சிற்றருவிகளாகப் பிரிந்து பாய்ந்து வந்து பூமி தொடும் நீர்வீழ்ச்சி ஒரு மூலிகை  அருவியாகவே தமிழர்களால் கருதப்படுகிறது. இங்கே குளித்தால் மனநோய் கூட அகன்று விடும் என்று நம்புபவர்கள் அனேகமுண்டு.

17.சித்திரக்கூட நீர்வீழ்ச்சி, சட்டீஸ்கர்

18.அமிர்ததாரா நீர்வீழ்ச்சி, சட்டீஸ்கர்

19.ஒகனேக்கல் நீர்வீழ்ச்சி, தமிழ்நாடு

20. குனே நீர்வீழ்ச்சி, மகாராஷ்டிரா

21. தலக்கோணம் நீர்வீழ்ச்சி, ஆந்திரப்பிரதேசம்

22. இருப்பு நீர்வீழ்ச்சி, கர்நாடகா

23. ஜாங் நீர்வீழ்ச்சி, அருணாச்சலப் பிரதேசம்

24. தோஷ்கார்க் நீர்வீழ்ச்சி, மகாராஷ்டிரா

25. 7. திற்பரப்பு நீர்வீழ்ச்சி, கேரளா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com