கட்டுரைகள்

அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் அற்புதங்கள் - பகுதி 3

தினமணி


திருச்சிற்றம்பலம்

திருஅருட்பிரகாச வள்ளலார் 
அருட்பெருஞ்ஜோதி     அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


வள்ளலார் வாழ்ந்த வீராசாமி பிள்ளை இல்ல நிகழ்வுகள்:

1.    அண்ணியார் பாப்பாத்தியம்மாள் வடிவில் இறைவி வடிவுடை நாயகி வள்ளலாருக்கு உணவு அளித்தல்.
2.    சிறுகுழந்தையாக ஒட்டு திண்ணையில் படுத்து உறங்கியபோது திண்ணையில் இருந்து விழாது காத்தல்
3.    மேல் வீட்டு அறையில் கடவுள் கண்ணாடியில் காட்சியளித்தது.
4.    தனது அக்கா உண்ணாமலை மகள் தன்கோட்டியை திருமணம் செய்தது.
5.    இங்குள்ள மேல் வீட்டு அறையில்தான் முதல் இரவு அன்று திருவாசகம் ஓதப்பட்ட இடம்.

மற்ற இடங்கள் வழிபாடு

1.    திருமுல்லை வாயில் வழிபாடு
2.    திருவலிதாயம் (பாடி) வழிபாடு
3.    திருவள்@ர் வழிபாடு
4.    திருத்தணிகை வழிபாடு 
5.    ஏழுகிணறு துலுக்காணத்து ரேணுகை வழிபாடு
6.    சென்னை வியாசர்பாடியில் வள்ளலார் சென்றபோது பாம்பு தீண்டாது சென்றது.

போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் சென்னை வாழ்வில் பெருமானுக்கு நடந்தவைகளைப் பார்த்தோம்.  1825 முதல் 1858 வரை 33 வருடங்கள் சென்னையில் வாழ்ந்த வள்ளலார் 1858ல் வடலூர் அருகில் உள்ள கருங்குழியில் உறைவிடமாகக் கொண்டார்.

கருங்குழி 1858 – 1867

வடலூரின் தெற்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ள ஒரு சிற்றூர் கருங்குழி.  இந்த ஊரில் தான் வள்ளலார் தந்தையார் இராமையாப் பிள்ளை கிராம கணக்கராக பணி செய்தார். இந்த ஊரின் கிராம மணியக்காரர் வேங்கடா ரெட்டியார் இல்லத்தில் தான் வள்ளலார் 9 ஆண்டுகள் தங்கியிருந்தார். வேங்கடா ரெட்டியார் துணைவியார் பெயர் முத்தாலம்மை.

இங்கிருந்து செய்த அருள் செயல்கள்:

1. தண்ணீர் விளக்கெரித்த இடம்
2. சன்மார்க்க சங்கம் 1865ல் ஆரம்பிக்கப்பட்ட இடம்
3. சத்திய தருமச்சாலையை இங்கிருந்து தான் துவக்கினார்
4.செம்பருக்கை கற்களில் நடந்து வந்து இறைவன் வள்ளலாரை ஆட்கொண்டது.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் 1865: 

வள்ளலார் 1865-ம் ஆண்டு சன்மார்க்க சங்கத்தை ஆரம்பித்தார். சங்கத்திற்கென்று சில கொள்கை நெறிகளை வகுத்தார்.

சத்திய தருமசாலை:

40 அன்பர்கள் வடலூரில் வள்ளலாருக்கு 80 காணி நிலம் தானமாக தந்தார்கள். அந்த இடத்தில் தான் 23-05-1867 தமிழ் பிரபவ வருடம் வைகாசி மாதம் 11 ஆம் நாள் சத்திய தருமச் சாலையை நிறுவினார்.  அவர் ஏற்றிவைத்த அடுப்பு 152 ஆண்டுகளாக அணையா அடுப்பாக எரிந்து கொண்டு வருகிறது.  பசித்து வருபவர்களுக்கு பசிப்பிணி நீக்கும் அட்சயப் பாத்திரமாக தருமச் சாலை விளங்குகிறது.

தருமச் சாலையின் சிறப்பு:

ஒரு மனிதன் கருவறைத்; தொடங்கி கல்லறை வரை தொடரும் பெரும் பிணி பசிப்பிணி.  உலகத்தில் புண்ணியம் செய்ய விரும்புபவர்கள் 32 வகையான தானங்களை செய்கிறார்கள்.  இதில் தலையாய தானம் அன்னதானம்.

தருமம் என்றால் என்ன?

* ஒருவனுக்கு வேண்டியது உணவு மட்டும் அன்று
* உடுக்க உடை
* இருக்க இடம்
* உழுவதற்கு நிலம்
* செலவிற்குப் பணம்
* பொருந்துவதற்கு மனைவி

இத்தனையும் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பதே தருமம் என்று பெயர்.

பசி வேதனை:

நரக வேதனை ஜனன வேதனை மரண வேதனை இந்த மூன்று வேதனையும் கூடி முடிந்த வேதனையே பசிவேதனை.  பசி இறைவனால் கொடுக்கப்பட்ட ஓர் உபகார கருவியாகும். இவைகளில் முக்கியமானது பசியே ஆகும்.  பசி தவிர மற்றவர்களால் வருந்துவோர் எல்லாவற்றையும் மறந்து உணவு தேட முற்படுவர். மனிதனின் உடலில் இருந்து உயிரைப் பிரிகின்ற விதம் 8 வகையாகும் அவை:

1.    பசி
2.    தாகம்
3.    இச்சை
4.    எளிமை
5.    பயம்
6.    ஆபத்து
7.    பிணி
8.    கொலை

அன்ன தருமம் செய்வதால் வரும் நன்மைகள்

1. சூலை குன்மம் குட்டம்  போன்ற நோய்கள் நீங்கும்.
2. பல நாட்கள் சந்ததியில்லாதவர்களுக்கு பசித்தவர்களுக்கு அன்னதானம் செய்வதை விரதமாக கொண்டவர்களானால் நல்ல அறிவுள்ள சந்ததி பிறக்கும்.
3. அற்ப வயது என்று அஞ்சி இறந்து போவதற்கு விசாரப்படுபவர்கள் அன்னதானம் செய்தால்  ஆயுள் நீடிக்கும்.
4. பசித்த ஜீவர்களுக்கு உணவு கொடுப்பதையே விரதமாகக் கொண்ட சம்சாரிகளுக்கு கோடை வெய்யில் வருத்தாது.  இயற்கை பேரிடர்களால் துன்பம் செய்விக்க மாட்டார்கள்.  விளை நிலத்தில் பிரயாசம் இன்றி விளைவு மென்மேலும் உண்டாகும் வியாபாரத்தில் தடையில்லாத இலாபங்கள் கிடைக்கும்.  உத்தியோகத்தில் கெடுதி இல்லாத மேன்மை உண்டாகும். ஊழ்வினையாலும் அஜாக்கிரதையாலும் சத்தியமாக ஒரு துன்பமும் நேரிடாது.

வள்ளலார் பசித்தவர்களுக்கு உணவு கொடுக்கும் சம்சாரிகளுக்கு எத்தகைய நன்மைகள் கிடைக்கும் என்று மேற்கண்ட செய்திகள் மூலம் அறியலாம்.

சத்திய ஞான சபை:

வள்ளலார் பார்வதிபுரம் பகுதியைச் சார்ந்த நாற்பது அன்பர்கள் கொடுத்த 80 காணி நிலத்தில் சத்திய தருமச் சாலையைக் கட்டின பின்பு 1871ல் சத்திய ஞான சபையை கட்ட ஆரம்பித்து 1872ல் முடிக்கிறார்.

உலகத்தில் உள்ள அனைத்து சாதி சமய மக்கள் எல்லாம் பொதுவாக வழிபடக்கூடிய ஓர் சபைதான் ஞான சபை.  எண் கோள வடிவம் தலைத்தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.  தெற்கு நோக்கி வாயிலை உடையது ஞான சபையில் சிற்சபை பொற்சபை என இருப்பிரிவுகளை உள்ளே அமைத்துள்ளார்.

பன்னிருகால் மண்டபம் மற்றும் நாற்கால் மண்டபம் ஒன்றினுள் ஒன்றாக உள்ளன.  நாற்கால் மண்டபம் நடுவே அருட்பெருஞ்ஜோதி இறைவன் உள்ளார்.

இந்த அருட் பெருஞ் ஜோதி இறைவனை மறைத்துக் கொண்டு ஏழுதிரைகள் வௌ;வேறு வண்ணங்களில் தொங்கவிடப்பட்டடுள்ளது.

திரை விளக்கம்:

1.    கருப்பு திரை         -    மாயா சக்தி
2.    நீலத்திரை        -    கிரியா சக்தி
3.    பச்சைத் திரை        -    பராசத்தி
4.    சிவப்புத் திரை        -    இச்சா சக்தி
5.    பொன்மைத் திரை    -    ஞான சக்தி
6.    வெண்மைத் திரை    -    ஆதி சக்தி
7.    கலப்புத் திரை        -    சிற்சக்தி

25-01-1872 ஆம் ஆண்டு தமிழ் பிரஜோற்பதி தை மாதம் 13-ந் தேதி சத்திய ஞான சபையில் முதல் ஜோதி தரிசனம் காட்டப்பட்டது.

சத்தி வளாகம்:

வள்ளலார் மேட்டுக்குப்பத்திற்கு 1870-ல் சென்று 1874 வரை நான்கு ஆண்டுகள் உறைவிடமாகக் கொண்டார். மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் தங்கி இருந்த இடத்திற்கு சித்தி வளாகம் என்று வள்ளலார் பெயர் இட்டார்.

சித்தி        -    வீடுபேறு
வளாகம்        -    இடம்.

வீடு பேறு அளிக்கும் இடம் சித்தி வளாகம் என்று பெயர். இந்த இடத்தில்தான் பல முக்கிய நிகழ்வுகள் நடந்த இடம் ஆகும்.

1.    சமாதி கட்டளை அறிவித்தது.
2.    சமரச வேத பாடசாலை நிறுவியது
3.    சத்தி ஞான சபை நிறுவி முதல் ஜோதி தரிசனம் கட்டப்பட்டது.
4.    ஒரே இரவில் அருட்பெருஞ்ஜோதி அகவல் எழுதப்பட்டது.
5.    சன்மார்க்க கொடி கட்டிக் கொண்டது.
6.    உள்ளே உள்ள விளக்கை வெளியே வைத்து வழிபடச் சொன்னது
7.    ஞான சரியை பாடியது
8.    முத்தேக சித்தி பெற்றது.

முத்தி என்பது முன்னூறு சாதனம்
சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம்.
என்று முத்தி சித்திகள் பற்றி வள்ளலார் விளக்குவார்.

சித்திகளின் வகைகள்:

1.    கரும சித்தி
2.    யோக சித்தி
3.    ஞான சித்தி

முத்தி வகைகள்:

1.    பத முத்தி: பதவி பெற நம்மை தகுதியாக்குவது
2.    பர முத்தி: இறைவனுடன் இரண்டறக்கலக்க நம்மை தகுதி செய்து கொள்வது.

அட்டமா சத்திகள்:

1.    அணிமா    -    துரும்பை மேருவாக்குவது
2.    மகிமா        -    மேருவை துரும்பாக்குவது
3.    கரிமா        -    மேருவை ஒன்றும் இல்லாமல் செய்வது
4.    இலகிமா    -    ஒன்றுமில்லாத இடத்தில் பல வகைகளை செய்தல்
5.    பிராத்தி    -    வேண்டுவன செய்தல்
6.    ஈசத்துவம்    -    குளிகை வல்லபத்தால் எங்கும் செல்வது
7.    பிரகாமியம்    -    பரகாயப் பிரவேசம்
8.    வசித்துவம்    -    ஏழுவகை தோற்றங்களையும் தன் வசப்படுத்துவது.

கரும சித்தி:

இறந்த உயிரை மூன்றே முக்கால் நாழிகை முதல் மூன்றே முக்கால் வருடத்திற்குள் எழுப்புவது.

யோக சித்தி:

இறந்த புதைத்த உடலை 12 வருடம் முதல் 108 வருடத்திற்குள் உடலை நாசம் அடையாமல் உயிர்ப்பித்தல் ஆற்றல் படைத்தவர் யோகசித்தர் ஆகும்.

ஞான சித்தர்:

64 ஆயிரம் சித்திகளையும் தன் வசத்தால் நடத்துவது வள்ளலார் முத்தேக சித்தி பெற்றது

ஸ்ரீமுக வருடம் தை மாதம் 19-ஆம் நாள் ஆங்கிலம் 30-01-1874ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை புனர்பூசமும் பூசமும் கூடிய நன்நாளில் நள்ளிரவு 12 மணிக்கு வள்ளலார் முத்தேக சித்தி பெற்றார். அருட்பெருஞ்ஜோதி இறைவனுடன் உடம்போடே ஒளி உடம்பு பெற்றார்.

முத்தேகம்:

1.    சுத்த தேகம்            -    ஒளி உடம்பு
2.    பிரணவதேகம்      -    ஒலி உடம்பு
3.    ஞான    தேகம்       -    அருள் உடம்பு

இதுகாறும் நாம் கூறிவந்தபடி ஒழுகி அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை வழிபட்டு உய்யுங்கள் என்று வாழ்த்தி தமது திரு அறைக்குள் நுழைந்து கதவைத் திருகாப்பிட்டுக் கொண்டு இரண்டரை நாழிகையில் சித்தி பெற்றார்.

வள்ளலார் அருளிய பாடல்.  பாடியவர் குமார வயலூர் திருஞான பாலசந்திரன். 

...தொடரும்

கட்டுரையாக்கம்: அருட்செல்வர் ஜோதிட மாமணி - சுவாமி சுப்பிரமணியம், M.Sc.,Ph.D.

தொடர்புக்கு - 9444281429 / 9382166019

www.vallalarswami.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT