மீனாட்சி அம்மன் ஆவணி மூலத் திருவிழா தொடங்கியது: ஆக.21-ல் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் 

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. 
மீனாட்சி அம்மன் ஆவணி மூலத் திருவிழா தொடங்கியது: ஆக.21-ல் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் 

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. 

சுந்தரேசுவரரின் 12 திருவிளையாடல்களை மையமாக வைத்து நடைபெறும் ஆவணி மூலத் திருவிழா ஆக. 9(நேற்று) கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

ஆகஸ்ட் 21-ல் கருங்குருவிக்கு உபதேசம், 16-ம் தேதி நாரைக்கு மோட்சம் அருளிய லீலை, 17-ல் மாணிக்கம் விற்ற லீலை, 18-ல் தருமிக்குப் பொற்கிழி அருளியது எனத் தொடர்ச்சியாக 19-ல் உலவாக்கோட்டை, 20-ல் பாணனுக்கு அங்கம் வெட்டியது, திருஞானசம்பந்தர் சைவ சமயத்தை நிலைநாட்டியது, 

ஆக.21-ல் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஆகஸ்ட் 22-ல் மாணிக்கவாசகருக்காக நரியைப் பரியாக்கிய லீலையும், 23-ல் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெற உள்ளது.

திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மதுரையில் எழுந்தருள்வார். அன்று காலை திருக்கோயிலில் இருந்து சுவாமி வைகை ஆற்றோரம் உள்ள புட்டுத்தோப்பு மண்டபத்தில் எழுந்தருள்வார். 

ஆக.,24-ல் விறகு விற்றல், 25-ல் சட்டத்தேர், 26-ல் தீர்த்த உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. 

திருவிழா முடியும் வரை திருக்கோயில் சார்பிலோ, உபயதாரர் சார்பிலோ திருக்கல்யாணம், தங்கரதம் உள்ளிட்ட உபய நிகழ்ச்சிகள் நடைபெறாது என கோயில் இணை ஆணையர் என். நடராஜன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com