உங்கள் கனவில் அடிக்கடி பாம்புகள் வந்து தொல்லை கொடுக்கின்றதா? இதோ அதற்கான பரிகாரம்!

கனவு என்பது ஒருவர் தூங்கும் பொழுது அவரது ஆழ்மனத்தில் எழும் மனப் படிமங்கள். நாம் காணும் ஒவ்வொரு..
உங்கள் கனவில் அடிக்கடி பாம்புகள் வந்து தொல்லை கொடுக்கின்றதா? இதோ அதற்கான பரிகாரம்!

கனவு என்பது ஒருவர் தூங்கும் பொழுது அவரது ஆழ்மனத்தில் எழும் மனப் படிமங்கள். நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும், ஒவ்வொரு பலன்கள் ஜோதிட ரீதியாகச் சொல்லப்படுகிறது. 

அதில் ஒரு சிலருக்கு தூங்கும் பொழுதெல்லாம் பாம்பு கனவில் வரும். அது அவரை பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தும். அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் பாம்பினால் தனக்கு ஏதேனும் தோஷம் உள்ளதா என்று ஜோதிடரிடம் அணுகி, அதற்கான பரிகாரம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

பாம்பை கனவில் காண்பது நெருங்கிய நண்பர்கள் மூலம் மனக்கசப்புகளோ அல்லது பொருள் இழப்போ ஏற்படும் என்பது ஒரு அறிகுறி. புதிய சூழலால் சில சங்கடங்கள் உண்டாகலாம். 

அடிக்கடி பாம்பு கனவில் வந்து கொத்தி ரத்தம் வருவது போல தொல்லை ஏற்பட்டால், சர்ப்ப தோஷம் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். உங்களுக்கு எதிராக சதி செய்கிறவர்கள் அதாவது மாந்திரிகம், சூனியம் செய்கிறவர்கள் இருக்கிறார்கள் என்றும் அர்த்தம்! இரண்டுக்கும் சரியான பரிகாரத்தை உடனடியாக செய்து கொள்ள வேண்டும். பாம்பு கனவில் வந்தால் பணம் வரும் என்று நம்புகிறார்கள். இது அவநம்பிக்கை.

பணமே கனவில் வரும்! அப்படியானால் தான் பணம் வரும்! மகாலட்சுமி, பெருமாள் இவர்களின் கையிலுள்ள சின்னங்கள் கனவில் வந்தால் பணம், நகை, சொத்து, சுகம் வரும்! பாம்புகள் கனவில் வரக்கூடாது. மூலிகையிலை கலந்த சாம்பிராணி புகை இரவு உறங்கச்செல்லும் முன் காட்டிவிட்டு உறங்க வேண்டும்.

பாம்பு பயம் அதிகமாக வந்தால் "ஓம் ஆதிசேஷாய நமோ நமஹ" என்ற மந்திரத்தை 18 முறை சொல்லிவிட்டு உறங்கச் செல்ல வேண்டும். இவர்கள், கிழக்கில் தலை வைத்துப் படுக்க வேண்டும். சர்ப்பதோஷத்திற்கான பரிகாரம் செய்து கொண்டால் நல்லது. 

புதிதாக திருமணமானவர்களுக்கு பாம்புகள் பின்னிப் பிணைவது போலக் கனவு வந்தால் உடனே பயம்கொள்ள தேவையில்லை. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெற போவதாக அர்த்தம். புது வாரிசு உண்டாவதற்கான அறிகுறிகள் தான் அவை. விரைவில் சந்தானப் பிராப்தம் கிடைக்கப்போகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com