செய்திகள்

கடன் மேல் கடன் ஏற்பட்டு கழுத்தை நெருக்குகின்றதா? கவலை வேண்டாம் இதோ பரிகாரம்!

தினமணி

நல்ல வேலை மாதம் ஆயிரமோ, இரண்டாயிரமோ சம்பளம் வாங்கி இனிமையாகக் குடும்பம் நடத்தினார்கள் நம் பெற்றோர்கள். அந்தகாலத்தில் பிரச்னைக்காக கடன் வாங்குவார்களே தவிர, வளர்ச்சிக்காக  அல்ல. ஆனாலும் ஆனந்தமாக மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தினார்கள் நம் பெற்றோர்கள். ஆனால், இந்த காலத்தில் வெளிநாட்டில் போய் லட்ச லட்சமாக சம்பாதித்து, வீடு, கார் எனச் சகல வசதி  இருந்தாலும், கூடவே கடன் தொல்லையும் நம்மை விடாமல் தொற்றிக் கொண்டே தான் இருக்கின்றது. 

கிரேடிட் கார்டு, டெபிட் கார்டு, வீட்டு லோன், கார் லோன், படிப்பு லோன் என்று மாத மாதம் சம்பாதிக்கின்ற காசு எங்க போகுதுன்னே தெரியல? கழுத்தை நெரிக்கும் அளவுக்கு கடன். இப்படிப்பட்ட  நெருக்கடியில் இருந்து எப்படி தப்பிக்கலாம்? இதற்கு ஏதாவது வழி இருக்கா என்று கேட்பவர்களுக்கு.. கட்டாயம் வழி இருக்கின்றது. வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாம சிரமப்படுவோரும்,  கொடுத்த கடனைத் திரும்பப் பெற முடியாமல் திண்டாடி வருவோருக்கும் ஒரு நல்ல வழியை ஏற்படுத்தித் தருவாராம் இந்தக் கடவுள். 

ருணம் போக்கும் கணபதி தான் அந்த கண்கண்ட தெய்வம். மனமுருகி நாம் செய்யும் வேண்டுதலை ஏற்கும் அந்த விஷேச கணபதி கடன் சுமையால் ஏற்பட்டுள்ள வலியை நீக்கி உடன் உறுதுணையாக  நிற்பார் என்பது தான் தொன்நம்பிக்கை. இந்த விநாயகர் யார் என்றால் அவர் தான் தோரண கணபதி. ருணம் போக்கும் கணபதி? பொதுவாகவே விநாயகர் வழிபாடு என்பது எளிமையாக பலனளிக்கும்  வழிபாடாகும். 

எங்குள்ளார் இந்த தோரண கணபதி? 

மயிலாடுதுறை, வாரணாசி, பிள்ளையார்பட்டி, சிருங்கேரி சாரதா பீடம் உள்ளிட்ட திருத்தலங்களில் தோரண கணேஷர் அமர்ந்துள்ளார். கடன் தீர்க்கும் கணபதி வழிபாடு மனிதர்களாகப் பிறந்தவர்கள்   தேவகடன், பித்ருகடன், மானுடக் கடன்களைத் தீர்ப்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும். 

மானுட கடனைத் தீர்க்க (அதாவது, தொழில் ரீதியாகக் குடும்ப ரீதியாக, தனிப்பட்ட முறையில் வாங்கி கடனை) தீர்ப்பதற்கு இந்தக் கணபதி வழிபாடு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தித் தரும். ருணம் என்ற  கடனைத் தீர்க்காவிட்டால் நம் மனமும், வாழும் காலமும் ரணமாகிவிடக்கூடும். இரு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் நல்ல ஆசீர்வாதத்தை தரவல்லது இந்த தோரண கணபதி வழிபாடு.

கோயில் அங்குள்ளது நான் அங்குச் சென்று தான் வழிபாடு செய்ய வேண்டுமா? என்று கேட்பவருக்கு? நாம் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டு தோரண கணபதியை மனதில் முழுமையாக நிறுத்தி வழிபாடு மேற்கொள்ளலாம். கடன் சுமை குறைந்ததும் ஒருமுறை கோயிலுக்கு சென்று தோரண கணபதியை வழிபட்டு வரலாம். 

அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து...

தோரண கணபதியே என் கடனை நான் அடைபேனாக!

தோரண கணபதியை விரைவில் நான் வாங்கிய கடனை அடைப்பேனாக!

தோரண கணபதியை வாழ்வில் நல்ல ஐஸ்வர்களை பெறுவேனாக!

ஓம் தோரண கணபதி நம! ஓம் தோரண கணபதி நம! ஓம் தோரண கணபதி நம! 

என்று தொடர்ந்து சொல்ல வேண்டும். இதைச் சொல்லும் போது கையில் சிறிது அரிசியும், கரும்பு சர்க்கரையும் பிள்ளையார் பிடிப்பது போன்று வைத்துக்கொண்டு தொடர்ந்து 106 முறை வடக்கு திசையை  நோக்கி அமர்ந்து ஜெபிக்க வேண்டும். பின்பு, அந்த அரிசியை எறும்புக்கோ, காகத்திற்கோ போட்டு விடலாம். தொடர்ந்து இதைச் செய்ய வாழ்வில் ஏற்பட்ட கடன் அனைத்தும் அடைந்து நல்ல வழி  பிறக்கும் என்பது திண்ணம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT