இந்த வாரம் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்? 

12 ராசிக்காரகளுக்குமான இந்த வார (ஜூலை 13 - ஜூலை 19) பலன்களைத் தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.
இந்த வாரம் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்? 

12 ராசிக்காரகளுக்குமான இந்த வார (ஜூலை 13 - ஜூலை 19) பலன்களைத் தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

இடையூறுகளை புத்தி சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். ஆனாலும் வேலைத் தொந்தரவு அதிகரிக்கும். நண்பர்கள் உதவுவார்கள். குடும்பத்தில் நிம்மதி நிறையும். பணத்துக்காக எதையும் செய்யாமல் மனிதாபிமானத்தைத் துணைக்கொண்டு காரியங்களைச் செய்யும் எண்ணம் பிறந்துள்ளதால் மனக்குழப்பங்கள் வெளியில் தெரியாமல் காரியமாற்றுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகள் மனக்கசப்பு நீங்கி நட்போடு பழகுவார்கள். வியாபாரிகளுக்கு வருமானம் சீராக இருக்கும். மறைமுக போட்டிகளைச் சமாளிப்பீர்கள். விவசாயிகள் தானிய விற்பனையை லாபகரமாகச் செய்து முடிப்பீர்கள். 

அரசியல்வாதிகள் தீட்டும் ரகசிய திட்டங்கள் வெற்றி பெறும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். பழைய பாக்கிகள் வந்து சேரும். பெண்மணிகள் நிதானத்துடன் செயல்படவும். பணவரவு தாராளமாகவே இருக்கும். மாணவமணிகள் எதிர்வரும் இடையூறுகளை சமாளித்தால் வெற்றிவாகை சூடலாம். உடற்பயிற்சி செய்து உற்சாகம் பெறுங்கள். 

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 13,14. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

பொருளாதார வளம் சீராக இருக்கும். பயணங்களால் நன்மை அடைவீர்கள். சட்டம், ராணுவம் போன்ற துறையை சார்ந்தவர்களுக்கு இது சாதகமான வாரம். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உடன்பிறந்தோரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். பழைய பாக்கிகளை வசூலிப்பீர்கள்.  

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் குறித்த காலத்திற்குள் செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகள் பக்கபலமாக இருப்பீர்கள். வியாபாரிகளுக்கு பொருள்களின் விற்பனை நல்ல முறையில் இருக்கும். எனவே, புதிய சந்தைகளை நாடுவீர்கள். விவசாயிகள் அதிக மகசூலைக் காண்பீர்கள். வாழ்க்கை வசதிகள் பெருகும். 

அரசியல்வாதிகளுக்கு மனதில் ஏற்படும் சஞ்சலமும் மேலிடத்தின் அதிருப்தியும் குழப்பத்தில் ஆழ்த்தும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் செய்வார்கள். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீர்கள். குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். மாணவமணிகள் கல்வியில் முன்னேற அதிகமாக உழைக்கவும்.  விளையாட்டுகளில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: வியாழனன்று குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 13,15. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்}3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

உங்களிடம் விரோதம் பாராட்டிய நண்பர்கள் இணக்கமாக மாறுவார்கள். உங்கள் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். எடுத்த காரியத்தை எளிதாக முடித்து விடுவீர்கள். 

உத்தியோகஸ்தர்களிடம் மேலதிகாரிகள் கனிவாக நடந்து கொள்வார்கள். ஆனாலும் அவர்களால் சலுகைகள் கிடைக்காது. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் நன்றாக இருக்கும். வியாபாரத்தில் புதிய யுக்தியைப் புகுத்துவீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் சிறப்பாக இருக்கும். கால்நடைகளாலும் பலன் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். கட்சித் தலைமை புதிய பதவிகளைக் கொடுக்கும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். பெண்மணிகள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வீர்கள். உங்கள் மதிப்பு உயரும். மாணவமணிகள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். பாடங்களைப் புரிந்து படிக்கவும்.

பரிகாரம்:  அம்பாளை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 14,15. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். பொருளாதார அபிவிருத்தி ஏற்படும். ஆனாலும் உற்றார் உறவினர்களிடம் எச்சரிக்கை தேவை. பயணங்களின்போது விபத்து ஏற்படாமலிருக்க கவனமாக இருக்கவும். எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள்.  

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளால் தொல்லைகள் ஏற்படும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். ஆனாலும் கூட்டாளிகளிடம் கவனமாக நடந்து கொள்ளவும். விவசாயிகளுக்கு எதிர்பாராத மகசூல் கிடைக்கும். கால்நடைகளின் மூலம் நல்ல பலனைப் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். தொண்டர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மேலும் நன்மை அடையலாம். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் செய்வதில் அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். பெண்மணிகள் தங்கள் உடமைகளை பத்திரப் படுத்திக் கொள்ளவும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். விளையாட்டுகளில் வெற்றி உண்டாக கடினமாக  உழைக்க வேண்டும்.

பரிகாரம்: மஹாலட்சுமியை நெய் தீபமேற்றி வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 13,16. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

யாரையும் புண்படுத்தாத விதத்தில் அணுகும் தன்மையுள்ள நீங்கள்அனைத்துக் காரியங்களிலும் ஆழமாகச் சிந்தித்து செயல்படுவீர்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக நடந்தேறும். 

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத நிம்மதி கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் லாபகரமாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும். விவசாயிகள்குத்தகை எடுப்பது போன்ற விஷயங்களைத் தவிர்க்கவும். கவனத்துடன் உழைத்து வருமானத்தை ஈட்டவும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பும் மரியாதை உயரும். மேலிடத்தின் பார்வை உங்கள் மீது விழும் வாய்ப்புள்ளது. கலைத்துறையினருக்கு பாராட்டும் பணமும் கிடைக்கும். பெண்மணிகள் சிக்கனத்தோடு இருக்கவும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். உடல் ஆரோக்கியம் பெற உடற்பயிற்சி செய்யவும்.

பரிகாரம்: செந்திலாண்டவரை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 14,16. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பிறரைச் சாராமல் தனித்து செயல்படுவீர்கள். ஆனாலும் குடும்பத்தில் அதிக செலவுகள் ஏற்படும். சிந்தித்து தேவையானவற்றுக்கு செலவு செய்யவும். உறவினர்களால் சில தொல்லைகள் உருவாகலாம். 

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் கடன் விண்ணப்பங்கள் சாதகமாக பரிசீலிக்கப்படும். வியாபாரிகளுக்கு பழைய கடன்கள் வசூலாகும். இதனால் புதிய முதலீடுகளைச் செய்யும் எண்ணம் மேலோங்கும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். கொள் முதல் லாபமும் தொடரும். 

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். இதனால் கட்சியில் சில முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். கலைத்துறையினர் தடைகளைத் தாண்டி ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். பெண்மணிகள் பிறரின் பேச்சை யோசிக்காமல் நம்ப வேண்டாம். கணவரிடமும் அவரின் குடும்பத்தினரிடமும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். மாணவமணிகள் விடா முயற்சியுடன் பாடங்களை மனப்பாடம் செய்யவும். உழைப்பு மிகுந்த பலனைத் தரும். பெற்றோரை அனுசரித்துச் செல்லவும்.

பரிகாரம்: காலபைரவரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 14,17. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

உங்களின் பெயரும் புகழும் உயரும். பொருளாதார நிலை சீராக இருக்கும். கூட்டாளிகளுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ஆனாலும் உறவினர்களிடம் இணக்கமான உறவு ஏற்படாது. அவர்களால் சிறுசிறு தொல்லைகள் ஏற்பட வாய்ப்புண்டு.  

உத்தியோகஸ்தர்கள் கடுமையாக உழைத்து திட்டமிட்ட வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தைப் பெறுவீர்கள். வியாபாரிகள் எவருக்கும் கடன் கொடுத்து வியாபாரத்தை உயர்த்த எண்ண வேண்டாம். சிறுசிறு முதலீடுகளே உன்னதமானது. விவசாயிகள் விளைச்சல் அதிகமாகி லாபத்தைப் பெறுவீர்கள். புதிய கழனிகளை வாங்கி லாபத்தைப் பெருக்கிக் கொள்ளவும்.  

அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சியினரிடம் மனம் திறந்து பேசவேண்டாம். மிகுந்த ஈடுபாட்டுடன் உழைக்கவேண்டிய நேரமிது. கலைத்துறையினர் சக கலைஞர்கள், ரசிகர்களின் ஒத்துழைப்புடன் திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். பெண்மணிகள் குடும்ப ஒற்றுமையை காப்பதில் சிரமப்படுவீர்கள். மாணவமணிகள் நண்பர்களிடம் ஜாக்கிரதையாகப் பழகவேண்டும்.  

பரிகாரம்: இம்மையிலும் நன்மை தரும் சிவபெருமானை வணங்கி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 13,17. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

கவனமாக இருக்கவேண்டிய நேரமிது. உடல் உபாதைகள் தோன்றி மறையும். ஷேர் மார்க்கெட் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபடாமல் இருக்கவும். பயணங்களால் நன்மை உண்டாகாது.  பூர்வீகச் சொத்துகளில் பராமரிப்பு செலவு உண்டாகும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு அனைத்து வேலைகளும் சுலபமாக முடியும். உங்களுடன் பணிபுரிபவர்களுடன் சுமுகமான உறவை மேம்படுத்திக் கொள்ளவும். வருமானமும் சீராக இருக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள். கூட்டாளிகளிடம் மனம் திறந்து பேச வேண்டாம். விவசாயிகள் புதுபுது விதைகள் வாங்கி விளைச்சலைப் பெருக்கிக்கொள்ளவும். 

அரசியல்வாதிகளின் செயல்கள் சாதனைகளாக மாறும். தொண்டர்களின் ஆதரவினால் கடினமான வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினரைத் தேடிப் புதிய ஒப்பந்தங்கள் வரும். திறமைகளால் நல்ல வருமானம் கிடைக்கும். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை ஏற்படும். மாணவமணிகள் விளையாட்டுத்தனத்தை குறைத்துக்கொண்டு மனதை ஒருநிலைப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 14,18. 

சந்திராஷ்டமம்: 13.

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பணவரவு அதிகரிக்கும். உறவினர்களாலும் நண்பர்களாலும் அனுகூலம் ஏற்படும். வாகனம் வாங்குவீர்கள். புதிய நம்பிக்கையுடன் ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தோருக்கு கொடுத்தவாக்கை காப்பாற்றுவீர்கள். உறவினர்களுடன் இணக்கமாக இருக்கவும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளைப் பட்டியலிட்டு செய்து முடிக்கவும். பதவி உயர்வு இல்லாவிட்டாலும் பணவரவுக்குத் தடை ஏற்படாது. வியாபாரிகள் வியாபாரத்தில் நன்மைகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். கூட்டாளிகள் சுமுகமாக நடந்துகொள்வார்கள். விவசாயிகளுக்கு மகசூல் திருப்திகரமாக இருக்கும். கடன் சுமை தீரும். பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும். 

அரசியல்வாதிகளை விட்டு தொண்டர்கள் விலகி இருப்பார்கள். சிறிய வெற்றிகள் உங்களை சமாதானப்படுத்தும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தத்தைப் பெற அதிக முயற்சி எடுக்க வேண்டி வரும். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்யோன்யம் அதிகரிக்கும். மாணவமணிகள் நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். அதிகாலையிலேயே எழுந்து சுறுசுறுப்புடன் பாடங்களைப் படிக்கவும். 

பரிகாரம்: ராமபக்த ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 16,17. 

சந்திராஷ்டமம்: 14,15.

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் நிம்மதி நிலவும். வருமானம் இரட்டிப்பாகும். திட்டமிட்ட செயல்களில் வெற்றிவாகை சூடுவீர்கள். பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். பேசும்போது நிதானம் தேவை. உடல்நலத்தில் எப்போதும் கவனம் வைத்திருக்கவும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு குழப்பங்கள் விலகும். சிறப்பாக பணியாற்றுவீர்கள். பண விஷயங்களில் சிக்கனமாக இருக்கவும். வியாபாரிகள் புதிய யுக்திகளால் பொருள்களை விற்பனை செய்வீர்கள். கூட்டாளிகளிடம் எச்சரிக்கை தேவை. விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். ஆனாலும் விவசாயப் பொருள்கள் வகையில் செலவு ஏற்படும். 

அரசியல்வாதிகள் மீது எதிர்க்கட்சியினர் அவதூறு சுமத்த நினைப்பார்கள். எனவே கவனம் தேவை. கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை நன்கு முடித்து புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். 
பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு இருப்பீர்கள். மாணவமணிகள் தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கிக் கொள்ள நேரிடலாம். விளையாட்டுத்தனத்தைக் குறைத்துக்கொண்டு பாடங்களை சிரத்தையுடன் படிக்கவும்.

பரிகாரம்: ஞாயிறன்று சூரியநமஸ்காரம் செய்து வரவும். 

அனுகூலமான தினங்கள்: 13,18.

சந்திராஷ்டமம்: 16,17.

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

கடினமான உழைப்பை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். என்றாலும் அதனை ஈடுகட்டும் வகையில் வருமானம் வந்துகொண்டிருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். வண்டி வாகனங்கள் வந்து சேரும் காலகட்டமிது. 

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் சுமுகமாகப் பழகவும். பணவரவு நன்றாக இருப்பதால் உழைப்பு வீண் போகாது. வியாபாரிகளுக்கு வருமானம் பெருகும். புதிய முதலீடுகளில் ஈடுபடுவது பற்றி யோசிப்பீர்கள். விவசாயிகளுக்கு குத்தகை பாக்கிகள் நல்லபடியாக வசூலாகும். பயிர்களுக்கு புழு பூச்சிகளால் பாதிப்புகள் ஏற்படாது.

அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றகரமான சூழ்நிலை அமையாது.மேலிடத்தின் அதிருப்தியையும் சந்திக்க நேரிடும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.பெண்மணிகள் ஆடை, ஆபரணங்களை வாங்கும்  எண்ணத்தைத் தள்ளிப்போடவும். மாணவமணிகள் நன்றாகப் படித்து சிறப்படைவீர்கள். நண்பர்களுடன் கால நேரங்களை மகிழ்ச்சியாக செலவிடுவீர்கள்.

பரிகாரம்: வளசரவாக்கம் "வேங்கடேச சுப்ரமணிய சுவாமி'யை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 13,17.

சந்திராஷ்டமம்: 18,19.

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

தெய்வ அனுகூலம் சிறப்பாக இருக்கும். எடுத்த காரியங்களை எந்தவித தடங்கலும் இன்றி நல்லபடியாக முடிப்பீர்கள். எதிர்ப்புகள் மறையும். சமுதாயத்தில் உயர்ந்தோரால் நன்மை அடைவீர்கள். உங்கள் தனிப்பட்ட விஷயங்களை நண்பர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும்.  

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள் என்றாலும் சக ஊழியர்களிடம் எச்சரிக்கை தேவை. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் நலமாக முடியும். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும். கால்நடைகளால் பலன் உண்டாகும்.

அரசியல்வாதிகள் உட்கட்சிப் பூசலை சந்திக்க நேரிடும். எனவே, தொண்டர்களின் ஆதரவு தேவை.  கலைத்துறையினர், கடுமையாக உழைக்கவும். உங்களிடமிருந்து சக கலைஞர்கள் சற்று ஒதுங்கியே இருப்பார்கள். 

பெண்மணிகளுக்கு பணவரவு அதிகரிக்கும். கணவருடனான ஒற்றுமை சீராகவே காணப்படும். மாணவமணிகள் விளையாடும்போது எச்சரிக்கை தேவை. உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும். 

பரிகாரம்: மதுரை மீனாட்சியை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 18,19. 

சந்திராஷ்டமம்: இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com