சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோயிலில் ஆடிப்பெருவிழா ஜூலை 20 முதல் தொடக்கம் 

சென்னை, தம்பு செட்டித் தெருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயிலில் ஆடிப்பெருவிழா....
சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோயிலில் ஆடிப்பெருவிழா ஜூலை 20 முதல் தொடக்கம் 

சென்னை, தம்பு செட்டித் தெருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயிலில் ஆடிப்பெருவிழா 20.07.2018 முதல் பெரும் விமரிசையாகத் தொடங்கவிருக்கின்றது. 

அன்னை ஸ்ரீ காமாட்சி ஸ்ரீ காளிகாம்பாள் எனும் திருநாமம் கொண்டு சர்வ மங்களகாரிணியாகவும், சர்வ துக்கவிமோசினியாகவும், சர்வ விக்னநிவாரிணியாகவும், சர்வவியாதி விநாசினியாகவும், சர்வ சௌபாக்யதாயினியாகவும் ஸ்ரீ சக்ர சாம்ராஜ்ஜினியாய் மேற்கு திசை நோக்கி எழுந்தருளி அன்பர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி மஹாராஜா அவர்கள் வருகை தந்து வழிபாடு செய்ததும், மாகாளி அருள்பெற்ற மகாகவி சுப்ரமணிய பாரதியார் தன் பாமாலையை சூட்டி வழிபட்டதும் இத்திருத்தலமே. 

பிரசித்தி பெற்ற இத்திருக்கோயிலில் நிகழும் விளம்பி வருடம் ஆடிமாதம் 4-ம் தேதி (20.07.2018) முதல் தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகள் மற்றும் பத்து ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னை ஸ்ரீ காளிகாம்பாளுக்கு, விசேஷ அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற உள்ளது. 

ஆடிப்பெருவிழாவில் ஒன்பது வெள்ளிக்கிழமைகளில் (20.07.2018 முதல் 14.09.2018 வரை) மாலை 6.00 மணியளவில் உற்சவர் ஸ்ரீ காளிகாம்பாளுக்கு ஊஞ்சல் உற்வசமும், அதைத்தொடர்ந்து பத்து ஞாயிற்றுக்கிழமைகளில் (22.07.2018 முதல் 23.09.2018 வரை) காலை 11.00 மணியளவில் பால், இளநீர், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர், பஞ்சாமிர்தம், புஷ்பங்கள் என ஒவ்வொரு வாரமும் 108 குடம் கொண்டு மூலவர் ஸ்ரீ காளிகாம்பாளுக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. 

விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் சிவஸ்ரீ T.S காளிதாஸ் சிவாசார்யர், பிரதம குருக்கள் தலைமையில், பிரம்மஸ்ரீ K.மூர்த்தி ஆச்சாரி Bsc. BL. அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் அறங்காவலர்கள் பிரம்மஸ்ரீ D.ஜெகதீசன் ஆச்சாரி, பிரம்மஸ்ரீ K.யுவராஜ் ஆச்சாரி, பிரம்மஸ்ரீ இரா.இராஜேந்திர குமார் ஆச்சாரி, பிரம்மஸ்ரீ P.பஞ்சாட்சரம் ஆச்சாரி அவர்களின் முன்னிலையில் செய்து வருகின்றனர். இப்பெருவிழாவில் அன்பர்கள் அனைவரும் வருகை தந்து தரிசித்து ஸ்ரீ காளிகாம்பாளின் திருவருளைப் பெற்றுய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் தொடர்புக்கு: 044 - 25229624

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com