மேனாம்பேடு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு மஹாஹோமம்

அம்பத்தூர், மேனாம்பேட்டில் உள்ள ஸ்ரீ அன்னபூரணி சமேத ஆத்மநாத ஈஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள..
மேனாம்பேடு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு மஹாஹோமம்

அம்பத்தூர், மேனாம்பேட்டில் உள்ள ஸ்ரீ அன்னபூரணி சமேத ஆத்மநாத ஈஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மனோன்மணி உடனாய ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் ஆலயத்தில் சகல ஐஸ்வரியம் நல்கிடும் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு மஹாஹோமம் நடைபெறுகிறது.

நிகழும் ஸ்வஸ்தி ஸ்ரீ மங்களகரமான விளம்பி வருடம் ஆடி மாதம் (4-ம் தேதி) 20.07.18 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணியிலிருந்து ஹோமம் தொடங்கி பிற்பகல் 1.30 மணி வரை ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மஹா ஹோமம் இறைவனின் திருவுள்ளத்தால் இனிதே நடைபெற உள்ளது. அனைத்து ஆன்மீக பக்தர்களும், சிவனடியார்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு பங்கேற்று எல்லாம் வல்ல மனோன்மணி அம்பிகை சமேத சொர்ண ஆகர்ஷண பைரவர் அருள் பெற வேண்டிக்கொள்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com