இந்த வாரம் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்? யார்? 

12 ராசிகளுக்குமான இந்த வார (ஜூலை 20 - ஜூலை 26) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து..
இந்த வாரம் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்? யார்? 

12 ராசிகளுக்குமான இந்த வார (ஜூலை 20 - ஜூலை 26) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

தீய பழக்கங்களிலிருந்து விடுபட மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் மேற்கொள்ளவும். ஆன்மிகத்தில் ஈடுபடவும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். எண்ணங்கள் அனைத்தும் செயல் வடிவம் பெறும். சிலருக்கு ஆபூர்வ சந்திப்புகள் நிகழும். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும். வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்களை லாபகரமாக செய்து முடிப்பீர்கள். தானிய விற்பனை நன்றாக இருக்கும். விவசாயிகள் உற்பத்திப் பொருள்களில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். கால்நடைகளால் லாபம் உண்டாகும். 

அரசியல்வாதிகளுக்கு  கட்சியில் மதிப்பு மரியாதை உயரும். தொண்டர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கைநழுவிப்போகும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். மாணவமணிகள் சீரிய முயற்சி செய்தால் சராசரிக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெறலாம்.

பரிகாரம்: சனிபகவானுக்கு சனிக்கிழமையன்று எள் தீபமேற்றி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 20, 21. 

சந்திராஷ்டமம்: 22, 23, 24.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

அனைத்து காரியங்களும் நேர்த்தியாக முடியும். உங்கள் மீதுள்ள வழக்குகள் தள்ளுபடியாகும். பொருளாதார நிலைமை சீராக இருக்கும். பெரியோரின் ஆசிகளைப் பெறுவீர்கள். கடன்கள் தீரும். அரசு சலுகைகள் கிடைக்கும். உடலாரோக்கியமும் நன்றாகவே காணப்படும். 

உத்தியோகஸ்தர்களிடம் மேலதிகாரிகள் நட்புடன் நடந்து கொள்வார்கள். இதனால் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல்கள் சீராக முடியும். கூட்டாளிகளை, அனுசரித்து நடந்து கொள்ளவும். விவசாயிகளுக்கு உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காது. எனவே, புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். 

அரசியல்வாதிகளை புதிய பொறுப்புகள் தேடி வரும். மேலிடத்தின் ஆதரவால் புதிய பயணங்களை செய்ய நேரிடும். கலைத்துறையினரின் முயற்சிகளை மற்றவர்கள் பாராட்டுவார்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும். பெண்மணிகளுக்கு பணவரவு நன்றாக இருக்கும். பேசும் நேரத்தில் கவனம் சேவை. மாணவமணிகள் பெற்றோரையும் நண்பர்களையும் அனுசரித்து நடந்து கொள்ளவும். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடவும். அதிகாலையில் கண்விழித்து படிப்பது நல்லது.

பரிகாரம்: சரஸ்வதி தேவியை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 21, 22.

சந்திராஷ்டமம்: 25, 26.

{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

சந்தோஷமான செய்திகளைக் கேட்பீர்கள். உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும். மனஉறுதியுடன் திட்டமிட்ட  வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் புதிய வளர்ச்சி ஏற்படும். ஆனால் பிறருக்கு வாக்கு கொடுப்பதையோ முன் ஜாமீன் போடுவதையோ தவிர்க்கவும். 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சரக்குகளை விற்பதில் மட்டுமே கவனம் செலுத்தவும். விவசாயிகள் மாற்றுப் பயிர்களை உற்பத்தி செய்வதன் மூலம் மேலும் லாபத்தைப் பெருக்கலாம். 

அரசியல்வாதிகள் தொண்டர்களை அனுசரித்துச் செல்லவும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களால் நன்மைகள் கிடைக்கும். ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்வீர்கள். பெண்மணிகள் குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உடலாரோக்கியம் மேம்பட, அதிக உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும். 

பரிகாரம்: மஹாலட்சுமியை  வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 20, 22.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

திட்டமிட்ட வேலைகளை விரைவில் முடிப்பீர்கள். பொருளாதாரம் சிறக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். செய்தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பல விஷயங்களை சாமர்த்தியமாக சமாளிக்கும் திறன் பெற்றிருப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். 

உத்தியோகஸ்தர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகள் சற்று கடுமையாகவே நடந்து கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு பணப்புழக்கம் நன்றாக இருக்கும். ஆனாலும் புதிய முதலீடுகள் வேண்டாம். விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகி விற்பனை அதிகரிக்கும். புதிய குத்தகை எடுக்கும் எண்ணங்கள் மேலோங்கும்.

அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். நண்பர்களால் ஏற்றம் பெறுவீர்கள். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். இதனால் வருமானம் பெருகும். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்த முயல்வீர்கள். குழந்தைகளால் எந்த பிரச்னையும் ஏற்படாது. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். 

பரிகாரம்: செவ்வாயன்று முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 22, 23. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். தைரியத்துடன் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகளைப் பெறுவீர்கள். உடல் நலம்  பாதிக்கப்படலாம். வாகனங்கள் ஓட்டும்போது கவனம் தேவை. பிறரிடம் நிதானமாக பேசவும். 

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். பொறுமையுடன் அவர்களை அணுகுவது நல்லது. வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபமும் மகசூலும் அதிகரிக்கும். புதிய கழனிகளை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கை தேவை. கலைத்துறையினர் தடைகளைத் தவிர்த்து புதிய ஒப்பந்தங்களை முடிப்பீர்கள். பெண்மணிகள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வீர்கள். புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள். உங்கள் மதிப்பு உயரும்.  மாணவமணிகள் கடினமாகப் பாடுபட்டு விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர்வீர்கள். 

பரிகாரம்: அம்பாளை வழிபடவும். செவ்வாயன்று செந்திலாண்டவரை வணங்கவும். 

அனுகூலமான தினங்கள்: 22, 23.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

கடினமாக உழைத்து வெற்றி பெறுவீர்கள். நண்பர்கள் உங்கள் பேச்சை மதிப்பார். சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். மறைமுக  பாதிப்புகளை சாதுர்யமாக சாளிப்பீர்கள்.  பயணங்களின்போது விழிப்புணர்வு தேவை.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். பணவரவு நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு கொள்முதல் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளில் தைரியமாக ஈடுபடலாம். விவசாயிகள் புதிய கழனிகள் வாங்குவார்கள். கடினமாக உழைத்து மகசூலைப் பெருக்கவும்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். தொண்டர்களை அனுசரித்து நடந்து கொள்வதால் மேலிடத்தின் பார்வை உங்கள் மீது விழ வாய்ப்புண்டாகும். கலைத்துறையினர் எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். பணவரவு சுமாராக இருக்கும். பெண்மணிகளிடம் உற்றார் உறவினர்கள் அனுசரணையாகவும் அன்பாகவும் நடந்து கொள்வார்கள். மாணவமணிகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 20, 24. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

நினைத்த வேலைகள் அனைத்தும் இடையூறுகள் இல்லாமல் முடியும். தற்போதைய சூழ்நிலைகளில் மாற்றம் தென்படும். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். சகோதர சகோதரிகளிடம் மனக்கசப்புகள் உருவாகலாம். பொருளாதார நிலைமை  சீராக இருக்கும்.   

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு சுமாராகவே இருக்கும். தங்களிடம் பணிபுரிபவர்களிடம் அன்புடனும் ஆதரவுடனும் நடந்து கொள்ளுங்கள். வியாபாரிகளுக்கு சமூகத்தில் புதிய அந்தஸ்து கிடைக்கும். வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும். புதிய நிலங்களை 
வாங்குவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு கட்சிப் பணிகளில் நாட்டம் குறையும். மேலிடத்திற்கு தகவல் அனுப்பும்போது கவனத்துடன் இருக்கவும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களே புதிய வாய்ப்புகளைத் தேடித் தருவார்கள். பெண்மணிகள் ஆடை அணிகலன்கள் வாங்கி மகிழ்வார்கள். கணவரிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளவும். மாணவமணிகள்
விளையாட்டில் சாதனை புரிவீர்கள். 

பரிகாரம்: பெருமாளை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 21, 24. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

உங்களின்அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். பழைய அனுபவம் கைகொடுக்கும். அனாவசிய பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பணவரவு நன்றாக இருக்கும். கவலைகள் நீங்கும். கடினமாக உழைத்து முன்னேறும் காலகட்டமிது. மறைமுக எதிரிகளை சமாளிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நட்புடன் பழகி அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் உதவியுடன் கடையை நவீனப்படுத்துவீர்கள். நன்கு உழைத்துப் பொருளீட்டுவீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் நன்றாகவே இருக்கும்.   குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். 

அரசியல்வாதிகள் தொண்டர்களிடம் அன்புடன் பேசி காரியத்தை சாதித்துக் கொள்ளவும். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த வளர்ச்சியை அடைவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்களைக் காண்பீர்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். 

பரிகாரம்: மேற்கு நோக்கி அமைந்துள்ள பிள்ளையாரை அருகம்புல் சாற்றி வணங்கவும். 

அனுகூலமான தினங்கள்: 22, 26. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

செய்தொழிலில் முக்கிய திருப்பம் ஏற்படும். வருமானம் நன்றாக இருக்கும். கவலையில்லாமல் வேலைகளில் ஈடுபடுவீர்கள். பூர்வீகச் சொத்துகளில் உள்ள வில்லங்கம் நீங்கும். வீண் விரயத்தை தவிர்க்கவும். எல்லோரிடமும் அவர்களுக்கு ஏற்றாற்போல் பேசி நற்பெயர் எடுப்பீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியடைவீர்கள். நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை. விவசாயிகள் கடினமாக உழைத்து நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். கால்நடைகளால் நன்மை உண்டாகும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களும் ஆதரவு தருவார்கள். கலைத்துறையினர் தங்களின் பணிகளை நேர்த்தியாக முடித்துக் கொடுப்பீர்கள். மனதிற்கினிய பயணங்களை மேற்கொள்வீர்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தினரிடமும் நன்மதிப்பு கிடைக்கும். கணவரின் உடல்நலத்தில் கவனம் செலுத்துவீர்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். 
வெளிவிளையாட்டுகளிலும் ஈடுபடலாம்.

பரிகாரம்: பார்வதி தேவியை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 23, 25. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உங்கள் அந்தஸ்து உயரும். உறவினர்கள், நண்பர்களிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். உங்களின் வேலைகள் அனைத்தும் திட்டமிட்ட காலத்திற்குள் முடியும். பயணங்களால் நன்மை உண்டாகும். 

உத்தியோகஸ்தர்களின் செயல்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். ஆனாலும் கவனம் தேவை. வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் வெற்றிபெறும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் பலன் அதிகரிக்கும். விவசாயக் கூலிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். எதிலும் கவனமாகச் செயல்படவும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களால் பலன் கிடைக்கும். இதனால் பெயரும் புகழும் பெறுவீர்கள். பெண்மணிகள் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கலாம். 

ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். மாணவமணிகள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். அதிகாலையில் எழுந்து பாடங்களைப் படிக்கவும்.

பரிகாரம்: திங்கள்தோறும் பவானி அம்மனை வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 24, 26. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பதில் சிறு தொய்வு ஏற்படும். எதிர்ப்புகளாலும் தடைகளாலும் திணறுவீர்கள். உடல் அசதி ஏற்படும். வாகனங்களால் செலவுகள் உண்டாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். 

உங்கள் அந்தஸ்து உயரும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் கவனம் செலுத்தவும். சக ஊழியர்கள் உதவமாட்டார்கள். வருமானம் சீராக இருக்கும். வியாபாரிகளுக்கு கொள் முதலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளில் தைரியமாக ஈடுபடுங்கள். விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். உடல்நலனில் அக்கறை கொண்டு மருத்துவர் பரிந்துரைப்படி உடல்நலனைப் பேணவும். 

அரசியல்வாதிகள் தங்களின் எண்ணங்களைத் தலைமையிடம் கூறிவிட்டு அமைதியாக இருக்கவும். கலைத்துறையினருக்கு வரவேற்புகள் குறைந்தாலும் திறமைகள் குறையாது. பெண்மணிகள் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். தந்தை வழி உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். மாணவமணிகள் விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர்வதற்குத் தடைகள் உண்டாகும். கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: துர்க்கையை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 20, 26. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

சிறப்பான பொருளாதார நிலைமை ஏற்படும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தடைகள் ஏற்பட்டாலும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். உங்களின் மதிப்பு, மரியாதை குறையாது. உடன்பிறந்தோரிடம் உறவு மேம்படும். பயணங்களும் உண்டாகும். 

உத்தியோகஸ்தர்கள் பதற்றப்படாமல் அலுவலக வேலைகளை செய்து முடிப்பீர்கள். பொருளாதாரம் நன்றாக இருக்கும். வியாபாரிகள் புதிய யுக்தியுடன் பொருள்களை விற்பனை செய்வீர்கள். விவசாயிகளுக்கு திட்டமிட்ட பணிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். சொத்துத் தகராறை சந்திக்க வேண்டி வரும் என்பதால் கவனம் தேவை. 

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு குறைவாகவே கிடைக்கும். செலவு செய்யும் நேரத்தில் கவனம் தேவை. பெண்மணிகள் ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். பிற விஷயங்களில் ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளவும். விளையாட்டுகளில் கவனமாக ஈடுபடவும்.

பரிகாரம்: வெள்ளியன்று பெருமாளையும் தாயாரையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 24, 25. 

சந்திராஷ்டமம்: 20, 21.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com