செய்திகள்

ஜோதிட ரீதியாக தங்கம் யாருக்கு அதிகம் சேரும்? யாருக்குச் சேராது? 

தினமணி

தங்கம் சேரும் யோகமும், தங்கம் தங்காமல் போகும் அவயோகமும் ஜாதக ரீதியாக யாருக்கு உண்டு என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம். 

மற்ற உலோகங்களை விட மஞ்சள் உலோகமான தங்கம் என்றால் அதற்குத் தனி மதிப்பு உண்டு. நவக்கிரங்களில் முழு முதல் சுபக்கிரகமாக விளங்குபவர் குரு. இவருக்குப் பிடித்த உலோகம் தங்கம். ஒருவர் ஜாதகத்தில் குரு பலமிக்க இடத்தில் இருந்தால், அவருக்கு எக்கச்சக்கமாகப் பொன்னும் பொருளும் சேருமாம். 

தங்கம் யாருக்கு அதிகம் சேரும்...

ஜாதகத்தில் குருவானவர் லக்னத்துக்கோ சந்திர ராசிக்கோ 1, 4, 5, 7, 9, 10 ஆகிய இடங்களில் இருந்தாலும் அவருக்கு தங்கச் சேர்க்கை உண்டாகும். 

குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் ஒன்றில் பிறந்து குரு பலம் பெற்று இருந்தால் தங்கம் சேரும். 

ஒருவர் ஜாதகத்தில் 4,7,10 ஆகிய இடங்களுக்கு குரு அதிபதியாகி, கேந்திராதிபதி தோஷம் பெற்று இருந்தாலும் 5,9 ஆகிய திரிகோண ஸ்தானங்களில் வலுத்திருக்கும் போது கேந்திராதிபத்திய தோஷம் விலகி பொன், பொருள் சேர்க்கை அதிகம் உண்டாகும். 

குருவுக்கு நட்பு கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய் சேர்க்கை இருந்தாலும் தங்கம் சேரும். வியாழக்கிழமை, உத்தராயண காலம் அல்லது வளர்பிறையில் பகல் வேளையில் பிறந்தவர்களுக்கு குருபலம் இருக்குமேயானால் அவருக்கு தங்கச் சேர்க்கை அதிகரிக்கும். 

தங்கம் யாருக்குத் தங்காமல் போகும்...

புதனும், சுக்கிரனும் குருவுக்கு எதிரிகள். புதனின் ராசிகளான மிதுனம், கன்னியும், சுக்கிரனின் ராசிகளான ரிஷபம், துலாம் ஆகியவை ஒருவருக்கு ராசி, லக்னமாக அமைந்து பலமில்லாமல் இருந்தாலும் அவருக்குத் தங்கம் தங்காமல் போகும். ஒருவேளை தங்கம் சேர்த்துவைத்திருந்தாலும் அது அவருக்குப் பயன்படாமல் போகும். 

மேஷம், மகரம் லக்ன, ராசிகளில் பிறந்தவர்களுக்கு குரு விரயாதிபதி. ஜாதகருக்கு குருபலம் இல்லாமல் இருக்குமேயானால் அவர்களுக்கு தங்கம் தங்காது, களவு போகவும் அதிக வாய்ப்புள்ளது. 

வீட்டில் தங்க சேர்க்கை அதிகரிக்க வழிபாடுகள்...

வியாழக்கிழமைதோறும் குருவுக்கு உகந்த மலர்களால் அர்ச்சித்து அவர் மனம் குளிர செய்தால், அவர்களுக்குப் பொன்னும் பொருளும் அள்ளித்தருவார் குருபகவான்.

திருச்செந்தூர் முருகப்பெருமானை வழிபட குருவருள் கிடைக்கும். 

குரு பகவானுக்கு உரிய ஸ்லோகங்களைச் சொல்லி வழிபடலாம். குருவுக்கு உகந்த ஸ்தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்யலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறி: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சிறைவாசிகளுக்கு சிறப்பு நீதிமன்றம்: 5 போ் விடுதலை

வாக்குச் சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பேரணி

திருப்பூா் தொகுதியில் 15 வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT