திருவண்ணாமலை தீபத் திருவிழா: காவல் தெய்வங்களின் வழிபாடு தொடக்கம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் தொடக்க நிகழ்வாக காவல் தெய்வங்களின் 3 நாள் உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது
திருவண்ணாமலை தீபத் திருவிழா: காவல் தெய்வங்களின் வழிபாடு தொடக்கம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் தொடக்க நிகழ்வாக காவல் தெய்வங்களின் 3 நாள் உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
 திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் மிக முக்கியமான விழா கார்த்திகை தீபத் திருவிழா. நிகழாண்டு வரும் புதன்கிழமை (நவம்பர் 14) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்வு வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.
 காவல் தெய்வங்களின் வழிபாடு: இந்த நிலையில், தீபத் திருவிழா தொடங்குவதற்கு முன்பாக, திருவண்ணாமலை நகரின் காவல் தெய்வங்களின் 3 நாள் வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்ரீதுர்க்கையம்மன் உத்ஸவம் நடைபெற்றது. இதையொட்டி, சின்னக்கடைத் தெருவில் உள்ள ஸ்ரீதுர்க்கையம்மன் கோயிலில் இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் உத்ஸவர் ஸ்ரீதுர்க்கையம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது.
 பின்னர், காமதேனு வாகனத்தில் சின்னக்கடைத் தெரு, தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு உள்ளிட்ட தெருக்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீதுர்க்கையம்மன், நள்ளிரவில் மீண்டும் கோயிலை சென்றடைந்தார்.
 இன்றும், நாளையும்: திங்கள்கிழமை (நவம்பர் 12) இரவு ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீபிடாரியம்மன் சந்நிதியில் ஸ்ரீபிடாரியம்மன் உத்ஸவமும், செவ்வாய்க்கிழமை (நவம்பர் 13) ஸ்ரீவிநாயகர் உத்ஸவமும் நடைபெறுகின்றன.
 கொப்பரை சீரமைப்பு: இதற்கிடையே, தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் மகா தீப கொப்பரையை சீரமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com