கும்பகோணம் பெருமாள் திருக்கோயிலில் மகாஅஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்

கும்பகோணம் அடுத்துள்ள நாதன் கோயில் எனும் நந்திபுரவிண்ணகரத்தில் எழுந்தருளியிருக்கும்..
கும்பகோணம் பெருமாள் திருக்கோயிலில் மகாஅஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்

கும்பகோணம் அடுத்துள்ள நாதன் கோயில் எனும் நந்திபுரவிண்ணகரத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாத பெருமாள் திருக்கோயிலில், ஐப்பசி மாத வளர்பிறை மகாஅஷ்டமி தினமான நவ.15 அன்று, திருக்கோயில் வளாகத்தில், ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி வானமாமலை ஸ்ரீமதுரகவி ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள், மடத்தின் சார்பில் கிருஷ்ணன் ஸ்வாமிகள் மற்றும் திருக்கோயில் பட்டாச்சாரியார்கள், இராமன் மற்றும் கோதண்டராமன் ஆகியோர் தலைமையில் மங்கள இன்னிசை முழங்க, ஸ்ரீசூக்த மற்றும் சுதர்சன ஹோமம் நடைபெற்றது.     

அதனைத்  தொடர்ந்து, மூலவர் ஜெகந்நாத பெருமாள் மற்றும் செண்பகவல்லி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனமும், பின்னர் சிறப்பு அலங்காரமும், தூப-தீபாராதனைகளும் நடைபெற்றது. 

இவ்விழாவில், பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். விழா நிறைவில் வந்திருந்த அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாட்டினை திருக்கோவில் நிர்வாகத்தினர், மற்றும் ஜெகந்நாத பெருமாள் பக்தர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தார்கள். 

- குடந்தை ப.சரவணன் 9443171383

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com