செய்திகள்

ஆண்டாள் கோயிலில் சுவாமிகளுக்கு 108 போர்வை சாற்றும் வைபவம்

DIN

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோயிலில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு சுவாமிகளுக்கு 108 போர்வை சாற்றும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது. 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் சிறப்பு பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசி அன்று நம்பாடுவான் என்ற பக்தனுக்கு பெருமாள் அருள் செய்ததை முன்னிட்டும், குளிர் காலம் வருவதால் அதனை பக்தர்களுக்கு அறிவிக்கும் வண்ணமும் இங்கு கோயில் கொண்டு அருள் பாலிக்கும் சுவாமிகளுக்கு 108 போர்வைகள் சாற்றப்படும் வைபவம் நடைபெறுவது வழக்கம். 

நிகழாண்டு விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டுமே கருடாழ்வார் சன்னதியிலிருந்து புறப்பட்டு பகல் பத்து மண்டபம் எழுந்தருள்வார். 

அங்கு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், ஸ்ரீ தேவி, பூமிதேவி, ஆழ்வார்கள், ஆச்சாரியர்களுக்கு 108 போர்வை சாற்றும் வைபவம் நடைபெற்றது. 

இதனை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, அதிகாலையில் புராணம்  வாசிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

SCROLL FOR NEXT