உழவாரப் பணிக்காக காத்திருக்கிறது பழையார் சிவன் கோயில்

பழையார் எனும்பெயரில் கொள்ளிட முகத்துவாரத்தில் ஓர் ஊர் உள்ளது. சோழ தலைநகரும் ஒன்று உள்ளது.
உழவாரப் பணிக்காக காத்திருக்கிறது பழையார் சிவன் கோயில்

பழையார் எனும்பெயரில் கொள்ளிட முகத்துவாரத்தில் ஓர் ஊர் உள்ளது. சோழ தலைநகரும் ஒன்று உள்ளது. இந்த பழையார் கொல்லுமாங்குடி - நெடுங்காடு சாலையில் ஆறு கி.மீ தூரத்தில் உள்ளது. 

பிரதான சாலையில் இருந்து ஊருக்குள் அரை கிலோ மீட்டர் சென்றால் பெரிய குளத்தின் மேற்கில் உள்ளது சிவாலயம். பெரிய செங்கற்கோயில் ராஜ கோபுரம் இல்லை அதற்கு ஒட்டினாற்போல் ஒரு விநாயகர் சன்னதி ஒன்று முன்னிழுக்கப்பட்ட ஒரு சிமென்ட் மண்டபம் கொண்டு உள்ளது. 

ஒரு கால பூஜை கோயில் தான் இது, அரசின் வரவு முறையாக இல்லாமல் இருக்கிறது, எனினும் ஒரு அந்தணர் குடும்பம் இதனை விட்டுப் பிரிய மனமில்லாமல் பூசை செய்து வருவதைக் கேள்விப்பட்டோம். 

பெரிய வளாகமாக உள்ளது கோயில் மதில் சுவர் செங்கல்லும் மண்ணும் வைத்துக் கட்டப்பட்டதால் காலம் அதனைச் சரித்து விட்டது. இறைவன் கிழக்கு நோக்கிய கருவறையிலும், இறைவி தெற்கு நோக்கிய கருவறையிலும் உள்ளனர். இருவரையும் ஒரு கூம்பு வடிவ மண்டபம் இணைக்கிறது. கருவறை வாயிலில் ஒருபுறம் சில விநாயகர் சிலைகள், நாகர் சிலைகள் உள்ளன. மறுபுறம் முருகன் பிராகாரத்திலும், கருவறை கோட்டத்திலும் தென்முகனை தவிர சிலைகள் ஏதும் இல்லை. 

கோயில் குடமுழுக்கு கண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ஆங்காங்கே விரிசல் காண துவங்கியுள்ளது மண்டபம். வளாகம் உழவாரப் பணிக்காக காத்திருக்கிறது. 

- கடம்பூர் விஜயன் (7639606050)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com