32 வடிவ கணேச வடிவங்களும் ஒரே இடத்தில் தரிசிக்க வேண்டுமா?

2018-ம் ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விரதம் செப்டம்பர் 13-ம் தேதி அனுஷ்டிக்கப்படுகின்றது.
32 வடிவ கணேச வடிவங்களும் ஒரே இடத்தில் தரிசிக்க வேண்டுமா?


2018-ம் ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விரதம் செப்டம்பர் 13-ம் தேதி அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள் விநாயகப் பெருமான். விநாயகர் வழிபாடு இந்த சமயம் மட்டுமல்லாது பௌத்தம், சமணம் போன்ற மதங்களிலும் பின்பற்றப்படுகிறது. 

முழு முதற்கடவுளான விநாயகரின் திருவுருவங்கள் தமிழ்நாட்டில் பல இடங்களில் காணப்படுகின்றது. அதிலும், 32 வடிவ கணேக வடிவங்களும் ஒரே இடத்தில் காணக்கிடைப்பது பெரும் பாக்கியம் தானே. 

அவ்வகையில் சென்னை, வடதிருமுல்லைவாயிலில் செந்தில்நகரில் வலம்புரி விநாயகர் ஆலயம் உருவாக்கப்பட்டது. திருமுல்லைவாயில் ரயில் நிலையத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இவ்வாலயம்.

இவ்வாலயத்திற்கு இயற்கையாகவே வில்வமரம் தல விருட்சமாக அமைந்துள்ளது. ஆலய மண்டபத்தின் விதானத்தில் 32 வகை கணேச வடிவங்களைத் தரிசிக்கலாம். சிருஷ்டி தத்துவம் 64 பிரிவுகளைக் கொண்டது. அவற்றிலிருந்து 32 தத்துவங்களின் மூலம் 32 கணேச வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த ஆலயத்தில் மாதாந்திர, வருடாந்திர உற்ஸவங்கள் நடக்கின்றன. ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று பெரிய அளவில் அன்னதானம் நடத்தப்படுகிறது. வலம்புரி விநாயகரை வாழ்வில் ஒருமுறையேனும் வழிபட்டு நீங்காத செல்வம் பெறலாம்.

இக்கோவிலில் சிவன், லட்சுமி நாராயணர், பூர்ண – புஷ்கலை சமேத ஐயனார், வள்ளி தேவசேனாவுடன் ஆறுமுகன், லட்சுமி நரசிம்மர், சரபேஸ்வரர், நவக்கிரகங்கள் போன்ற  தெய்வங்களுக்கும் சந்நிதிகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com