விநாயகர் வழிபாடு எப்படி பிரசித்தி பெற்றது?

விநாயக சதுர்த்தி விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின்
விநாயகர் வழிபாடு எப்படி பிரசித்தி பெற்றது?

விநாயக சதுர்த்தி விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இவ்விழா மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப் பட்டிருக்கிறது. அது அந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாசார விழாவாகவும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பின்னர் பீஷ்வாக்கள் ஆட்சிக் காலத்திலும் இந்த விநாயகர் வழிபாடு என்பது தொடர்ந்து நடந்திருக்கிறது பிறகு அது மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக மாறிவிட்டது. 

மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் பிறகு சுதந்திர போராட்டக் காலத்தில் தான், இந்துமதத்தின் பால் ஈர்ப்புக்கொண்ட அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் இதை ஆண்டாண்டு பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார்.

அதன் பிறகு தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் மட்டுமின்றி எல்லோரும் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்தினர். ஏழை மக்களுக்கு சில்லறை காசுகளையும் ரூபாய் நோட்டுகளையும் இதன் போது வழங்கினர்.

17-ம் நூற்றாண்டின் போது தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு மன்னர் வட மாநிலத்தில் போர் புரிந்து வெற்றிபெற்றார் அதன் நினைவாக அங்கிருந்த விநாயகர் சிலையை கொண்டு வந்தார். அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் விநாயகர் வழிபாடுகள் தொடங்கின. தமிழகத்தில் இவ்விழா பெரும்பாலும் குடும்ப விழாவாகவே கொண்டாடப்பட்டது. வெகுகாலத்தின் பின்னரே பொது விழாவாக அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டாடப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் விநாயகர் சதுர்த்தி விழா பிரசித்தி பெறவில்லை. சீனா, ஜப்பான், தாய்லாந்து, மொங்கோலியா, மியான்மார் ஆகிய நாடுகளிலுள்ள பௌத்த மக்களும் பிள்ளையாரை வழிபடுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நாடெங்கும், ஏன் உலகெங்கும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடைப்பிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும் பெறுவார்கள் என்பது நிச்சயம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com