சனிக்கிழமை 17 நவம்பர் 2018

சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேரூர் ஆதீனத்தின் அருளாட்சி ஏற்பு

DIN | Published: 11th September 2018 02:35 AM
அருளாட்சிப் பொறுப்பு ஏற்ற சாந்தலிங்க மருதாசல அடிகளாருடன் துறவிகள். 


பேரூர் அருள்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில் சாந்தலிங்க மருதாசல அடிகளார் திங்கள்கிழமை அருளாட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
பேரூர் ஆதீனம் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் உடல் நலக்குறைவால் கடந்த ஆகஸ்ட் 31 -ஆம் தேதி முக்தியடைந்தார். இதைத்தொடர்ந்து அவரது குருபூஜை, ஒளி வழிபாடு மற்றும் சாந்தலிங்க மருதாசல அடிகளாரின் அருளாட்சிப் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி ஆகியன பேரூர் திருமடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றன. 
தொடக்க நிகழ்ச்சியாக, காலை 6.30 மணி அளவில் வேள்வியும், சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் சமாதி கோயிலுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து, திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சாந்தலிங்க மருதாசல அடிகளாருக்கு புனித நீர் தெளித்து செங்கோல் கொடுத்து பட்டாபிஷேகம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், வேலூர் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
இதையடுத்து, காலை 10.25 மணிக்கு கொலு வழிபாடும், அருளாசி வழங்குதலும் நடைபெற்றன. பிற்பகல் 2.30 மணி அளவில் பேரூர் அடிகளாரின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆதீன குரு மகா சந்நிதானங்கள், துறவியர் பெருமக்கள் மற்றும் சான்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

More from the section

மலேசியாவில் ஒரு சபரிமலை! 
பத்து திருக்கரங்களுடன் காட்சிதரும் தசபுஜ ஐயப்பன்!
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மாலை அணியத் திரண்ட ஐயப்ப பக்தர்கள்
கார்த்திகை முதல் நாளான இன்று மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் 
செங்கல்பட்டு கோயில்களில் முருகனுக்கு சாந்தி உற்சவம்