18 நவம்பர் 2018

நாளை முதல் தேவஸ்தான நாள்காட்டிகள், கையேடுகள் இணையதளத்தில் விற்பனை

Published: 13th September 2018 02:33 AM


தேவஸ்தான இணையதளத்தில் 2019-ஆம் ஆண்டுக்கான நாள்காட்டிகள் மற்றும் கையேடுகள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 14) முதல் விற்பனைக்குக் கிடைக்கும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் ஆண்டுதோறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் முதல் நாள் புதிய ஆண்டின் நாள்காட்டிகள் மற்றும் கையேடுகளை தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, வியாழக்கிழமை (செப்டம்பர் 13) திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்க உள்ளது.
அதற்கு ஆந்திர அரசு சார்பில், பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க வருகை தரும் ஆந்திர முதல்வர் 2019-ஆம் ஆண்டின் நாள்காட்டிகள், கையேடுகளை வெளியிட தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
அந்த நாள்காட்டிகள் மற்றும் கையேடுகள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 14) முதல் ttdsevaonline.com என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு விரைவாக நாள்காட்டிகள், கையேடுகள் அவர்கள் வீட்டுக்கு உடனடியாக அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
அதற்கான குறுஞ்செய்தியும் பக்தர்களின் செல்லிடப்பேசிக்கு அனுப்பப்படும். நாள்காட்டிகள், கையேடுகளை முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு, அவற்றை உடனடியாக பட்டுவாடா செய்ய வேண்டும் என ஊழியர்களுக்கு தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.

 

More from the section

தீபத் திருவிழாவின் நான்காம் நாள்: நாக வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலா
வருண பகவானுக்கு சிறப்பு பூஜை
கார்த்திகை முதல் நாள்: ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவிப்பு
திருப்பதியில் படி உற்சவம்
மகா பைரவர் கோயிலில் நவ.22இல் தர்ப்பண மண்டப பூமி பூஜை