இன்று ஸ்ரீ ராதாஷ்டமி! ஶ்ரீ ராதையை வணங்கி கிருஷ்ணரின் நல்லருளை பெறுவோம்!!

இன்று ஸ்ரீ ராதாஷ்டமி! ஶ்ரீ ராதையை வணங்கி கிருஷ்ணரின் நல்லருளை பெறுவோம்!!

கண்ணன் ஆவணி அஷ்டமியில், ரோகிணி நட்சத்திரத்தில், மதுரா சிறைச்சாலையில்..

கண்ணன் ஆவணி அஷ்டமியில், ரோகிணி நட்சத்திரத்தில், மதுரா சிறைச்சாலையில் வசுதேவர் - தேவகி தம்பதியருக்கு நள்ளிரவு 12.00 மணிக்கு அவதரித்தார். அதற்கடுத்த சுக்லபட்ச அஷ்டமியில், விசாக நட்சத்திரத்தில், வ்ருஷபானு - கீர்த்திதா தம்பதிக்கு, பர்ஸானா என்னுமிடத்தில் நண்பகல் 12.00 மணிக்கு ராதை அவதரித்தாள்.

ஶ்ரீமதி ராதாராணி தோன்றிய நன்னாள், ராதாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஶ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி முடிந்த பின்னர் அதற்கு அடுத்த அஷ்டமியன்று இந்நன்னாள் வருகின்றது.

இன்றைய தினத்தில் ஶ்ரீமதி ராதாராணியை வணங்கி, பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் நல்லருளைப் பெற முயல்வோமாக! 

ஸ்ரீ ராதா ப்ரணாமம்

ஸ்ரீமதி ராதாராணிக்கான வணக்கம்

தாப்த - காஞ்சன - கௌராங்கி ராதே வ்ருந்தாவனேஸ்வரி
வ்ருஷபானு - ஸுதே தேவி ப்ரணமாமி ஹரி - ப்ரியே

உருக்கிய பொன்னிற மேனியை உடையவளும், பிருந்தாவனத்தின் ராணியுமான ராதாராணிக்கு எனது பணிவான வணக்கங்கள். மன்னர் விருஷபானுவின் புதல்வியாகிய தாங்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவளாவீர்.

- மாலதி சந்திரசேகரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com