ஸ்ரீமத் விராட் விஸ்வ பிரம்ம முதலாம் ஆண்டு விழா

ஸ்ரீமத் விராட் விஸ்வ பிரம்ம முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு வேத வேள்வி, ஷன்னவதி ஹோமம் ஆகியவை திங்கள்கிழமை நடைபெற்றன.
மத் விராட்  விஸ்வ  பிரம்ம  விழாவையொட்டி  நடைபெற்ற  திரவியாஹுதி  ஷன்னவதி  ஹோமம். 
மத் விராட்  விஸ்வ  பிரம்ம  விழாவையொட்டி  நடைபெற்ற  திரவியாஹுதி  ஷன்னவதி  ஹோமம். 


ஸ்ரீமத் விராட் விஸ்வ பிரம்ம முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு வேத வேள்வி, ஷன்னவதி ஹோமம் ஆகியவை திங்கள்கிழமை நடைபெற்றன.
திருவள்ளூர் அருகே பெருமாள்பட்டு கிராமத்தில் கற்பக விநாயகர் கோயில் பூங்கா வளாகத்தில் ஸ்ரீமத் விராட் விஸ்வ பிரம்ம முதலாம் ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆர்.சந்திரசேகர ஆச்சாரியார் தலைமை வகித்தார். கல்யாணசுந்தரம் ஆச்சாரியார் வரவேற்றார்.
இதில், ஸ்ரீமத் விராட் விஸ்வ பரப் பிரம்மரின் படத்தை என்.ஜி.பழனிவேலும், காயத்ரிதேவியின் படத்தை கா.அருணாச்சலமும் திறந்து வைத்தனர். அதைத் தொடர்ந்து திருப்பாச்சூரைச் சேர்ந்த ஸ்ரீவித்யா உபாசகர், லலிதாம்பிகை தேவஸ்தான பீடாதிபதி பிம்சுத்தி நாடி சந்தானம திரவியாஹுதி ஷன்னவதி ஹோமம் என்ற வேத வேள்வியும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மஹா பூர்ணாஹுதி தீபாராதனை, மங்கள ஹாரத்தி நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 
இந்த ஹோமத்தில் பங்கேற்றால் தீராத கடன் தொல்லை, நோய்கள், பூதம்-பிசாசு தொல்லை, நவக்கிரகங்களின் பாதிப்பு ஆகியவை நீங்குவதோடு, மாங்கல்ய பலம், தொழில் வசியம் கைகூடும் என்பதும், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாகும். எனவே, இந்த விழாவில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். 
நிறைவாக, விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் மங்கலப் பொருள்கள், பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டது. அன்னதானமும் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீமத் விராட் விஸ்வ பிரம்ம ஜயந்தி விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com