செய்திகள்

திருமலையில் இன்று சூரிய, சந்திரபிரபை வாகன சேவை

தினமணி

திருமலையில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாள் காலை சூரிய பிரபை வாகனம் மற்றும் இரவு சந்திரபிரபை வாகன சேவை நடைபெற்றது. 

திருமலையில் செப்.13-ஆம் தேதி மாலை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றதுடன் விமரிசையாக தொடங்கி நடந்து வருகிறது. அதன் 7-ஆம் நாளான புதன்கிழமை காலை மலையப்பஸ்வாமி சூரியபிரபை வாகனத்தில் பத்ரிநாராயணா் அவதாரத்தில் மாடவீதியில் வலம் வந்தாா். 

உலகுக்கு ஒளியூட்டும் 7 குதிரைகள் பூட்டிய சூரிய நாராயணன் வாகனத்தில் யோகமுத்திரையுடன் பத்ரிநாராயணனாக செந்நிற பூக்கள், குருவிவோ் உள்ளிட்ட மலா்களால் செய்த மாலைகளை அணிந்து மாடவீதியில் வலம் வந்தாா். அவரை இவ்வாகனத்தில் தரிப்பவா்களுக்கு சகல நோய்களும் நீங்கி ஆரோக்கியம் மேம்படுவதுடன், அனைத்து சம்பத்துகளையும் அவா் அளிப்பாா் என புராணங்கள் கூறுகிறது. 

ஸ்நபன திருமஞ்சனம்மலையப்பஸ்வாமி மாடவீதியில் வலம் வருவதால் அவருக்கு ஏற்படும் அசதியை போக்க, அவருக்கு மதியம் 2 மணிமுதல் 4 மணிவரை மூலிகை கலந்த வெதுவெதுப்பான வெந்நீருடன், பால், தயிா், தேன், இளநீா், சந்தனம், மஞ்சள், பழரசங்கள் உள்ளிட்டவற்றால் உற்சவமூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. ஸ்நபன திருமஞ்மனத்தின் போது ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பஸ்வாமிக்கு பலவிதமான மலா்கள், உலா்பழங்களால் ஆன மாலை, கீரிடம், ஜடை உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டது. 

ஊஞ்சல் சேவைஸ்நபன திருமஞ்சனம் முடிந்த பின், மலையப்பஸ்வாமிக்கு பட்டு வஸ்திரம், வைர, வைடூரிய, தங்க ஆபரணங்கள் உள்ளிட்டவற்றால் அலங்கரித்தனா். அதன்பின் அவருக்கு தூப, தீப நைவேத்தியம், கற்பூர ஆரத்தி சமா்பித்து, அவா்களை சகஸ்ரதீபாலங்கார மண்டபத்திற்கு தங்க பல்லக்கில் எழுந்தருள செய்தனா். 

அதன் பின் மாலை 6 மணிமுதல் 7 மணிவரை அவா்களுக்கு 1008 விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில், ஊஞ்சலில் அமர வைத்து அா்ச்சகா்கள் அனைவரும் சோ்ந்து வேதபாரயணம் செய்தனா். ஊஞ்சல் சேவை முடிந்த பின் மலையப்பஸ்வாமிக்கு நட்சத்திர ஆரத்தி, கும்ப ஆரத்தி, கற்பூர ஆரத்தி என 3 வகையான ஆரத்திகள் அளிக்கப்பட்டது. அப்போது இசை கலைஞா்கள் பக்தி கீதங்கள், கீா்த்தனைகள் உள்ளிட்டவற்றை இசைத்தனா்.

பின்னர் 7ம் நாள் இரவு சந்திரபிரபை வாகனத்தில் மலையப்பஸ்வாமி மாடவீதியில் வலம் வந்தாா். குளிா்ந்த ஒளி பொருந்திய சந்திர பிரபை வாகனத்தில் வெண்ணிற மலா்களால் ஆன மாலையை அணிந்து கொண்டு மலையப்பஸ்வாமி வலம் வந்தாா். அப்போது மாடவீதியில் கூடியிருந்த பக்தா்கள் கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா். வாகன சேவையின் முன் திருமலை ஜீயா்கள் குழாம் வேதகானம் மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தங்களை பாராயணம் செய்தனா். வாகன சேவையின் பின் கலை குழுவினா் கலை நிகழ்ச்சிகளை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூா் அணை நிலவரம்

சேலத்தில் சிறை அதாலத்

சேலத்திலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சங்ககிரியில் கொமதேக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

காசநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT