ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி உற்சவம் துவக்கம்

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நாளை அதிகாலை 3.00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 

தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி புரட்டாசி சனி உற்சவம் நாளை முதல் தொடங்குகிறது. இதை முன்னிட்டு அதிகாலை 3.00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருமஞ்சனம் நடைபெறுகிறது. 

இதைதொடர்ந்து 12.30-க்கு உச்சிகால பூஜையும், இரவு 8.00 மணிக்கு சாயரட்சை பூஜைகள் நடைபெறுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com