வெள்ளிக்கிழமை 19 அக்டோபர் 2018

திருவண்ணாமலையில் நாளை கிரிவலம் வர உகந்த நேரம்

By  திருவண்ணாமலை,| DIN | Published: 23rd September 2018 12:38 AM

புரட்டாசி மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் திங்கள்கிழமை கிரிவலம் வர உகந்த நேரம் எது என்பதை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
 திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையை வலம் வந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமலையம்மனை தரிசித்தால், நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே, ஒவ்வொரு மாத பௌர்ணமியன்றும் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து, செல்கின்றனர்.
 இந்நிலையில், புரட்டாசி மாத பௌர்ணமி திங்கள்கிழமை (செப்டம்பர் 24) காலை 7.41 மணிக்குத் தொடங்கி, செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 25) காலை 8.42 மணிக்கு முடிவடைகிறது. எனவே, பக்தர்கள் இந்த நேரத்தில் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரர் கோயில் இணை ஆணையர் இரா.ஞானசேகர் தெரிவித்தார்.
 

More from the section

தீவினைகள் நீங்க, திருமணத் தடை விலக அகத்தீசுவரர் கோவில், அகத்தியான்பள்ளி
63 நாயன்மார்களில் ஒருவரான ஏனாதிநாதநாயனார் குருபூஜை விழா
ஜெகந்நாத பெருமாள் திருக்கோயிலில் வளர்பிறை அஷ்டமி விழா வழிபாடு
சபரிமலையில் தடியடி; 144 தடையுத்தரவு
திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 8-ஆம் நாள்: தங்கத் தேரில் வலம் வந்த மலையப்பர்