நாச்சியார் கோயிலில் சிறப்பு லட்சார்ச்சனை 

நாச்சியார்கோயில் கல்கருடன்  திருக்கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு  சிறப்பு லட்சார்ச்சனை நடைபெற்றது 
நாச்சியார் கோயிலில் சிறப்பு லட்சார்ச்சனை 

நாச்சியார்கோயில் கல்கருடன்  திருக்கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு  சிறப்பு லட்சார்ச்சனை நடைபெற்றது 

கும்பகோணம் அடுத்துள்ள  நூற்றியெட்டு திவ்யதேசத்தில் ஒன்றான உலக புகழ்பெற்ற அருள்மிகு கல் கருடன் தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கும் நாச்சியார்கோயில் தலத்திலுள்ள அருள்மிகு  ஸ்ரீவஞ்சுளவல்லி தாயார் சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருக்கோயில் வாகன மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் சந்நிதியில் காலை முதல் இரவு வரை  ஏக தின லட்சார்ச்சனையும் அதனைத் தொடர்ந்து ஸ்வாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் தூப தீபாராதனைகளும் நடைபெற்றது 

இதில் ஆன்மீக அன்பர்கள் பெரும் திரளாகக் கலந்து  கொண்டு மகாலட்சுமி அம்சமான அருள்மிகு வஞ்சுளவல்லி தாயாரையும் ஸ்ரீனிவாசப் பெருமாளையும் சேவித்துச்  சென்றார்கள் 

பக்தர்களுக்கு  அன்னதான பிரசாதங்கள்  வழங்கப்பட்டது இவ்விழாவின் ஏற்பாட்டினை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தார்கள்

- குடந்தை ப.சரவணன் - 9443171383
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com