கோவை தண்டு மாரியம்மன் கோயிலில் தீச்சட்டி ஊர்வலம்

கோவை தண்டு மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி முக்கிய நிகழ்ச்சியான தீச்சட்டி ஊர்வலம் இன்று நடைபெறுகிறது.
கோவை தண்டு மாரியம்மன் கோயிலில் தீச்சட்டி ஊர்வலம்


கோவை தண்டு மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி முக்கிய நிகழ்ச்சியான தீச்சட்டி ஊர்வலம் இன்று நடைபெறுகிறது. 

கோவை அவிநாசி சாலையில் உள்ள தண்டு மாரியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கியது. அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 18-ம் தேதி அக்கினிச் சாட்டு, திருவிளக்கு வழிபாடு, 19-ம் தேதி வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 20-ம் தேதி குதிரை வாகனத்தில் திருவீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கோயிலில் நடப்பட்ட கம்பத்துக்கு ஆயிரக்கணக்கான பெண்கள் மஞ்சள் நீரூற்றி வழிபட்டனர். இதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை மாலை அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

இந்நிலையில், திருவிழாவையொட்டி இன்று தீச்சட்டி ஊர்வலம் நடைபெற உள்ளது. இன்று காலை 6 மணிக்கு கோனியம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, லிங்கப்ப செட்டி வீதி, சிரியன் சர்ச் சாலை, புரூக் பாண்ட் சாலை வழியாக அனுப்பர்பாளையம், டாக்டர் நஞ்சப்பா ரோடு வழியாக அவிநாசி சாலையில் உள்ள தண்டு மாரியம்மன் கோயிலை ஊர்வலம் சென்றடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com