திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் தேரோட்டம்

நாகை மாவட்டம், திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் கோயில் இந்திர திருவிழாவையொட்டி தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவெண்காட்டில் நடைபெற்ற சுவேதாரண்யேசுவரர் கோயில் தேரோட்டம்.
திருவெண்காட்டில் நடைபெற்ற சுவேதாரண்யேசுவரர் கோயில் தேரோட்டம்.

நாகை மாவட்டம், திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் கோயில் இந்திர திருவிழாவையொட்டி தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம், அகோரமூர்த்தியாக மனித உருவில் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். நவக்கிரகங்களில் புதனுக்குரிய பரிகார தலமாகவும் இக்கோயில் விளங்குகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திர திருவிழா நிகழாண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலையில் விநாயகர், சுப்பிரமணியர், பிரம்ம வித்யாம்பாள் சமேத சுவேதாரண்யேசுவரர் உள்ளிட்ட சுவாமிகளின் உத்ஸவர்கள் அந்தந்த தேர்களுக்கு எழுந்தருளினர். பின்னர், காலை 11மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், சீர்காழி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பாரதி  ஆகியோர் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
இதில் துணை ஆணையரும், கோயில் தக்காருமான பாலசுப்பிரமணியம், கோயில் நிர்வாக அதிகாரி முருகன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று,  பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர்கள் நான்கு வீதிகளின் வழியாக வலம் வந்து மாலையில் நிலையை வந்தடைந்தன. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவெண்காடு காவல் ஆய்வாளர் (பொறுப்பு)  சிங்காரவேலு, உதவி ஆய்வாளர் அறிவழகன் தலைமையில் போலீஸார் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com