செய்திகள்

பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா

தினமணி

தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தோடு நிறை சந்திரன் கூடும் மங்கள நாளில் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு ஆலயங்களில் சிறப்பு வழிபாடும் தேரோட்டடும் நடப்பது வழக்கம். 

தைப்பூசம் என்றதும் நமக்கெல்லாம் நினைவிற்கு வருவது பழநியும், பாதயாத்திரையும் ஆகும். பாதயாத்திரையாக பழனிக்குவரும் பக்தர்களுக்கு அன்னதானம் வரும் ஒரு மாபெரும் கைங்கர்யத்தை ஆண்டுதோறும் சென்னை சைதாப்பேட்டையில் இயங்கிவரும் அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவால் சிறப்பாக செய்து வரப்படுகின்றது.

தொடர்ந்து ஒன்பதாம் ஆண்டாக ஜனவரி 18 மற்றும்  19-ம் தேதிகளில் ஒட்டன் சத்திரம் குழந்தை வேலப்பன் சன்னதி அருகே உள்ள எல்.என் திருமண மண்டபத்தில் (பழனி செல்லும் முன் 20 கி.மீ தூரத்தில் உள்ளது) அன்னதானக்குடில் அமைக்கப்பட்டு பக்தி இன்னிசை, கூட்டு  வழிபாடு, வேல்பூஜை, வேல் மாறல், வேல் மாறல் பாராயணம் காலை முதல் இரவு வரை ஆகார வசதிகள் போன்ற வைபவங்களுடன், பாதயாத்திரையாக வரும் அன்பர்களுக்கு இலவச மருத்துவ சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் அவர்கள் பழனிக்கு செல்லும் வரை உதவிட தண்ணீர்பாட்டில், பிஸ்கட் மற்றும் இனிப்பு வகைகள், பாராயண புத்தகங்கள் ஒரு பையில் போடப்பட்டு வழங்கப்பட உள்ளதாக குழுவின் அங்கத்தினரான திரு.மணிவண்ணன் தெரிவிக்கின்றார். 

தானங்கள் பலவற்றில் சிறந்ததுஅன்னதானம் என்பதை மனதிற்கொண்டு பக்தர்கள் இந்த கைங்கர்யத்தில் பங்கேற்கலாம். 

தகவல்களுக்கு 9944309719, 9842198889

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT