தைப்பூச ஜோதி தரிசனம்: திரளானோர் பங்கேற்பு

திருவள்ளூரில் உள்ள அருள்பிரகாச வள்ளலார் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு நடைபெற்ற ஜோதி தரிசன விழாவி
திருவள்ளூர் அருள்பிரகாச வள்ளலார் சபையில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு. 
திருவள்ளூர் அருள்பிரகாச வள்ளலார் சபையில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு. 


திருவள்ளூரில் உள்ள அருள்பிரகாச வள்ளலார் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு நடைபெற்ற ஜோதி தரிசன விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் ஆலய வளாகத்தில் அருள்பிரகாச வள்ளலார் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்தை முன்னிட்டு ஜோதி தரிசன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி இக்கோயிலில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் சார்பில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலையில் தீபாராதனையும், அகவல் பாராயணமும் நடைபெற்றன. பிற்பகல் 12.10 மணிக்கு ஜோதி தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தரிசன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் 3 ஆயிரம் பேருக்கு அறுசுவையுடன் உணவு வழங்கப்பட்டது. 
அதைத் தொடர்ந்து மாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் வள்ளலார் திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது, பக்தர்கள் தங்கள் வீட்டு வாசலில் விளக்கேற்றி வரவேற்றனர். 
பொன்னேரியில்...
பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அருட்பிரகாச வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சபையில் தைப்பூச விழா திங்கள்கிழமை நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சபை அமைந்துள்ளது. 
இந்த சத்திய சபையில் நாள்தோறும் 200 பேருக்கு மதிய வேளையில் அன்னதானம் செய்யப்பட்டு வருகிறது. வியாழக்கிழமை தோறும் அருட்பா சொற்பொழிவு நடைபெறும். தைப்பூச நாளன்று வள்ளலார் அருள்ஜோதி வடிவானதாக ஐதீகம். அதன்படி வள்ளலாரின் 146-ஆவது தைப்பூச விழாவை யொட்டி, இங்குள்ள சத்திய சபையில் காலையில் சன்மார்க்க கொடியேற்றுதல், அகவல் ஒதுதல், கஞ்சி வார்த்தல் ஆகியவை நடைபெற்றது. மதியம் 500 பேருக்கு அன்னதானம் செய்யப்பட்டது. 
இதையடுத்து மாலை அருட்பா ஒதல், அருட்பா சொறிபொழிவு ஆகியவை நடைபெற்றன. இதையடுத்து இரவு ஜோதி தரிசனம் நடைபெற்றது. 
இதேபோன்று பொன்னேரியை அடுத்த சின்னக்காவனம் கிராமத்தில் உள்ள வள்ளலார் தாயார் சின்னம்மையார் இல்லத்திலும் அன்னதானம் மற்றும் ஜோதி தரிசனம் ஆகியவை நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com