குமரி வெங்​க​டா​ஜ​ல​பதி கோயி​லில் யாக​சாலை பூஜை தொடக்​கம்

கன்​னி​யா​கு​மரி திரு​மலை திருப்​பதி வெங்​க​டா​ஜ​ல​பதி கோயி​லில் மஹா கும்​பா​பி​ஷே​கத்​தை​யொட்டி, யாக​சாலை பூஜை​கள்
கோ​யில் வளா​கத்​தில்​ செவ்வாய்க்கி​ழமை தொடங்​கிய யாக​சாலை பூஜை.
கோ​யில் வளா​கத்​தில்​ செவ்வாய்க்கி​ழமை தொடங்​கிய யாக​சாலை பூஜை.


கன்​னி​யா​கு​மரி திரு​மலை திருப்​பதி வெங்​க​டா​ஜ​ல​பதி கோயி​லில் மஹா கும்​பா​பி​ஷே​கத்​தை​யொட்டி, யாக​சாலை பூஜை​கள்

செவ்​வாய்க்​கி​ழமை மாலை தொடங்​கின. 
கன்​னி​யா​கு​மரி விவே​கா​னந்த கேந்​திர வளா​கத்​தில் திரு​மலை திருப்​பதி தேவஸ்​தா​னம் சார்​பில் ரூ. 22.5 கோடி மதிப்​பீட்​டில் வெங்​க​டா​ஜ​ல​பதி கோயில் கட்டப்​பட்​டுள்​ளது. 
இக்​கோ​யி​லில் மூல​வ​ராக வெங்​க​டா​ஜ​ல​ப​தி​யும், பத்​மா​வதி தாயார், ஆண்​டாள் சன்​னதி, கரு​டாழ்​வார் சன்​ன​தி​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளது.
கீழ்​த​ளத்​தில் கல்​யாண மண்​ட​பம், அன்​ன​தா​னக் கூடம், முடி​கா​ணிக்கை செலுத்​து​மி​டம், பிர​சாத ஸ்டால் ஆகி​ய​ன​வும், கோயி​லைச் சுற்றி தேரோ​டும் வீதி​க​ளும் அமைக்​கப்​பட்​டுள்​ளன.
கன்​னி​யா​கு​மரி விவே​கா​னந்​த​பு​ரம் சந்​திப்​பி​லி​ருந்து ஒற்​றை​யால்​விளை வழி​யாக சின்​ன​முட்​டம் துறை​முக சாலை​யி​லி​ருந்து கோயி​லுக்​குச் செல்ல தனி​யாக பாதை வசதி செய்​யப்​பட்​டுள்​ளது.
​யா​க​சாலை பூஜை: ​இக்​கோ​யில் மஹா கும்​பா​பி​ஷே​கம் ஞாயிற்​றுக்​கி​ழமை (ஜன. 27) காலை 7 மணிக்​குத் தொடங்கி நடை​பெ​று​கி​றது. இதை​யொட்டி, 5 நாள்​கள் நடை​பெ​றும் யாக​சாலை பூஜை செவ்​வாய்க்​கி​ழமை மாலை 6.30 மணிக்கு தொடங்​கி​யது.
திருப்​பதி கோயில் தலைமை அர்ச்​ச​கர் சேஷாத்​திரி தலை​மை​யில் 60-க்கும் மேற்​பட்ட வேத விற்​பன்​னர்​கள் யாக​சாலை பூஜையை நடத்​து​கின்​ற​னர். இதில், திரு​மலை தேவஸ்​தான முக்​கிய அதி​கா​ரி​கள், உள்​ளூர் கமிட்டி நிர்​வா​கி​கள் பங்​கேற்​றுள்​ள​னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com