சிதம்பரம் நடராஜர் கோயிலில் கின்னஸ் சாதனை நாட்டிய நிகழ்ச்சி: 7,500 நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 7,500 நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்ற கின்னஸ் சாதனைக்கான பிரமாண்ட நாட்டிய நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கின்னஸ் சாதனை நாட்டிய நிகழ்ச்சி: 7,500 நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 7,500 நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்ற கின்னஸ் சாதனைக்கான பிரமாண்ட நாட்டிய நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கின்னல் உலச சாதனை நிகழ்விற்காக பிரமாண்ட நாட்டிய நிகழ்ச்சியான தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சார்பில் "நடேசர் கவுத்துவம்" என்ற தலைப்பில் 7,500 ஆயிரம் நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்ற பிரமாணட நாட்டிய நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை 8.45 மணிக்கு தொடங்கி 25 நிமிடங்கள் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமார் 7,500 நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று ஒரே நேரத்தில் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான மக்கள் இந்நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.  

இதற்கு முன்னர் சென்னையில் 2017 ஆம் ஆண்டு வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 4 ஆயிரத்து 525 நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று நாட்டியமாடியது இதுவரை சாதனையாக இருந்ததுவந்தது. இந்த சாதனையை முறியடிக்கும் விதத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலிலில் நடைபெற்ற நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டிய நிகழ்ச்சி தொடக்கவிழாவில்  சி.ஞானஸ்கந்த தீட்சிதர் வரவேற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.முருகேசன் தொடக்கவுரையாற்றினார். பிரபல நாட்டியக் கலைஞர் பத்மபூஷன் டாக்டர் பத்மா சுப்பிரமணியன் கின்னஸ் நாட்டிய நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 

தஞ்சை ஆர்ட்ஸ் மற்றும் கல்சுரல் அகாதெமி நிறுவனர் பி.ஹேரம்பநாதன் கின்னஸ் சாதனை நிகழ்ச்சிக்கான கின்னஸ் கேடயத்தை வழங்கினார். சென்னை கிரியோட்டிவ் டீம் ரெக்கார்ட்ஸ் நிறுவன விவேக் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரையாற்றினர். 

நாட்டிய நிகழ்ச்சி ஏற்பாடுகளை சின்னமனூர் ஏ.சித்ரா, பொதுதீட்சிதர்களின் செயலாளர் ஜெ.ந.நடேஷ்வர தீட்சிதர், துணைச் செயலாளர் ஜி.பி.மகாதேவ தீட்சிதர், தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ் தலைவர் எஸ்.வி.நவமணி தீட்சிதர், துணைத் தலைவர் எஸ்.சிவசங்கர தீட்சிதர், பொருளாளர் ஜெய.நடராஜமூர்த்தி தீட்சிதர், உறுப்பினர்கள் ஆனந்த தாண்ட தீட்சிதர், விஜயபால தீட்சிதர், சிவச்செல்வ தீட்சிதர் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

பிரமாண்ட நாட்டிய நிகழ்ச்சியை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் மேற்பார்வையில் சிதம்பரம் டிஎஸ்பி சு.கார்த்திகேயன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com