திருப்பதி: 69,054 பேர் தரிசனம்

ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 69,054 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 26,424 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 


ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 69,054 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 26,424 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 
புதன்கிழமை காலை நிலவரப்படி 9 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காகக் காத்திருந்தனர். அவர்களின் தரிசனத்துக்கு 8 மணிநேரம் ஆனது. நடைபாதை, நேர ஒதுக்கீடு, விரைவு தரிசனம் மற்றும் தேவஸ்தானம் வழங்கும் முதன்மை தரிசனங்களில் பக்தர்கள் 3 மணிநேரத்துக்குள் ஏழுமலையானை தரிசித்து திரும்பினர். 
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 8,795 பக்தர்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் 3,617 பக்தர்களும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 14,125 பக்தர்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயிலில் 1,028 பக்தர்களும், கபில தீர்த்தம் அருவிக்கரையில் உள்ள கபிலேஸ்வரர் கோயிலில் 2,178 பக்தர்களும் புதன்கிழமை தரிசனம் செய்ததாக தேவஸ்தான மக்கள் தொடர்புத்துறை அதிகாரி ரவி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com