சட்டமணி

சர்கார் திரைப்படமும் 49P விதியும்...

வழக்கறிஞர் சி.பி. சரவணன்

விஜய் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியான ‘சர்கார்’ படம் ஓட்டு மற்றும் 49பி (பிரிவு - ஓட்டு உரிமை) ஆகியவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. தமிழகத்தில் நிலவும், அரசியல் சூழலையும், அரசியல் பின்னணியையும் மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

49P என்றால் என்ன ???

1961ம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் 49P (1)வது விதியின் படி...

“ஒருவரது ஓட்டு மற்றொருவரால், கள்ள ஓட்டாக பதிவு செய்யப்பட்டது எனில், தொடர்ந்து அவரது விருப்பத்திற்கு ஓட்டு போட வேண்டும் என்று நினைத்தால், வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருக்கும் விண்ணப்பம் 17B ஒன்றை பூர்த்தி செய்து, உரிய அதிகாரியிடம் கொடுத்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தகுந்த பதிலளிக்க வேண்டும். இது சரியாக இருந்தால், அவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்.”

49P (2)வது விதியின் வாக்காளருக்கு வாக்குச் சீட்டு அளிப்பதற்கு முன்னர் படிவம் 17B யில் அவர் பெயரை பதிவிட வேண்டும்

இதுவே அவர் பார்வையற்றவராக இருந்தால், வேறு ஒருவரது துணையுடன் செல்லக்கூடாது. மாறாக, அங்குள்ள தலைமை அதிகாரியின் உதவியுடன் சென்று அவர் வாக்களிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

49P க்கும் ‘சர்காருக்கும்’ என்ன தொடர்பு?

அரசியல் பின்னணிக் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ‘சர்கார்’ படத்தில் விஜய் வெளிநாட்டிலிருந்து தனது வாக்கைப் பதிவு செய்ய இந்தியா வருகிறார். அங்கு வந்த பிறகு தான் அவருக்குத் தனது ஓட்டு கள்ள ஓட்டாக பதிவாகியுள்ளது என்று தெரியவருகிறது.

இதையடுத்து, அந்தத் தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்கச் சொல்லி நீதிமன்றம் செல்கிறார். 49P விதியின் படி விஜய் வாக்களிக்கலாம் என்று தீர்ப்பளித்த நீதிமன்றம் வாக்குச்சாவடி அமைக்கவும் உத்தரவிடுகிறது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களது ஓட்டும் கள்ள ஓட்டாக பதிவு செய்யப்பட்டதால், தங்களுக்கும் வாக்களிக்க உரிமை வேண்டும் என்று 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மனுதாக்கல் செய்கின்றனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைப்படி, மறு தேர்தல் நடத்த உத்தரவிடப்படுகிறது.

இப்படத்தில் வில்லி கதாப்பாத்திரத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இதில் வரலட்சுமியின் கதாப்பாத்திரத்தின் பெயர் கோமளவள்ளி. பெற்ற தந்தைக்கே விஷம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு கோமலவள்ளியின் கதாப்பாத்திரம் கொடூரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கோமளவள்ளி என்ற பெயர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்பதால் அதிமுகவிற்குள் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல், அரசின் இலவச திட்டங்கள் குறித்தும் சர்கார் திரைப்படத்தில் விமர்சிக்கப்பட்டிருந்தது.

அதுமட்டுமின்றி, 49P விதியைப் பயன்படுத்தினால், கள்ள ஓட்டு பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்ற வலுவான ஒரு யோசனையை இத்திரைப்படம் முன் வைக்கிறது. இந்த நிலையில், இந்த 49P சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, முதல் முறையாக இந்தியா அளவிலும் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது....

தமிழக அமைச்சர்கள்…

‘இலவசம் வேண்டாம்’ என மக்கள் தான் கூற வேண்டும், காசுக்காக நடிப்பவர், தயாரிப்பவர் சொல்ல அருகதை இல்லை’

- என அமைச்சர் காமராஜும்,

‘அழுதுபுரண்டாலும், தலைகீழாக நின்றாலும் நடிகர் விஜய், எம்ஜிஆர் ஆக முடியாது... ஜெயலலிதா இருக்கும் போது இது போன்ற படங்களை எடுத்து இருந்தால், இவர்களை வீரர்கள் என நினைத்திருப்போம்’

- என அமைச்சர் ஜெயக்குமாரும்,

"சர்கார் படத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்"

- என அமைச்சர் கே.பி.அன்பழகனும்,

‘ஆலோசனைக்கு பிறகு பட தயாரிப்பாளர், நடிகர் மீது வழக்கு பதியப்படும். சர்கார் படத்தை திரையிட்ட திரையரங்குகள் மீதும் வழக்கு பதியப்படும்’

- என அமைச்சர் சி.வி.சண்முகமும்,

‘சர்கார் படத்தில் அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது விஜய்க்கு நல்லதல்ல. சர்கார் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். ’

- என அமைச்சர் கடம்பூர் ராஜூவும் கூறிவருவதும்,

அடக்குமுறை மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு முட்டுக் கட்டை போடுவதுடன், மக்களை விழிப்புணர்வு செய்யக்கூடாது எனவும் ஆட்சியர் எண்ணுவதாக தோன்றுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT