தேர்தல் ஸ்பெஷல்-1 பாராளுமன்ற உறுப்பினருக்கான தகுதிகள் என்னென்ன?

ஏதேனும் மாநிலத்தின் பட்டியல் சாதியினருக்கு இடம் ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் போது, அவர் அந்த மாநிலத்தின் அல்லது வேறு ஏதேனும் மாநிலத்தின் பட்டியல் சாதியினைச் சேர்ந்தவராகவும் மற்றும் ஏதேனும் மக்
தேர்தல் ஸ்பெஷல்-1 பாராளுமன்ற உறுப்பினருக்கான தகுதிகள் என்னென்ன?

மக்களவை (லோக் சபா)

நாடாளுமன்றத்தின் கீழ் அவையான லோக் சபா அல்லது மக்களவை முக்கியத்துவம் வாய்ந்த சபையாகும். இச்சபை உறுப்பினர்களை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கின்றனர்.

தற்போது உள்ள மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆகும். இதில் பல்வேறு மாநிலங்களிலிருந்து 530 உறுப்பினர்களும், யூனியன் பிரதேசங்களிலிருந்து 13 உறுப்பினர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

குடியரசு தலைவர் இரண்டு ஆங்கிலோ-இந்திய சமுதாயத்தினரை உறுப்பினராக நியமனம் செய்கிறார். இவ்வாறு மொத்தம் 545 உறுப்பினர்களைக் மக்களவை கொண்டுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து-84 கூறும் மக்களவை தேர்தலில் போட்டியிடத் தகுதிகள்

  • போட்டியிடும் நபர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

  • 25 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

  • மத்திய மாநில அரசுப் பணியில் சம்பளம் பெறுபவராக இருக்கக் கூடாது.

  • மனவளர்ச்சி குறைந்தவர்களும், பெற்ற கடனை திருப்பித் தர முடியாதவர்களும் போட்டியிட முடியாது

பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of the People Act 1951) ல் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கான தகுதிகள் வரையறை செய்யப்பட்டிருக்கின்றது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் பாகம் - II ல் தகுதிகள் மற்றும் தகுதிக் கேடுகள் எனும் தலைப்பில் அத்தியாயம் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினருக்கான தகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலங்களவை உறுப்பினருக்கான தகுதியாக, இந்தியாவில் பாரளுமன்றத் தொகுதி ஒன்றில் அவர் வாக்காளராக இருந்தால் மட்டுமே ஏதேனும் மாநிலம் அல்லது ஒன்றியப் பிரதேசத்தின் பிரதிநிதியாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படத் தகுதியுடையவர் ஆவார்.

பாகம்-II

தகுதிகள் மற்றும் தகுதிக் கேடுகள்

QUALIFICATIONS AND DISQUALIFICATIONS

அத்தியாயம்- I

பாராளுமன்ற உறுப்பினருக்கான தகுதிகள்

(Qualifications for Membership of Parliament)

பிரிவு 3. மாநிலங்களவை உறுப்பினருக்கான தகுதிகள்: நபர் ஒருவர் இந்தியாவில் பாராளுமன்ற தொகுதி ஒன்றில் ஓர் வாக்காளராக இருந்தாலன்றி, ஏதேனும் மாநிலம் அல்லது ஒன்றியப் பிரதேசத்தின் பிரதிநிதியாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியுடையவரல்லர்.

பிரிவு 4. மக்களவை உறுப்பினருக்கான தகுதிகள்: மக்களவையில் ஓர் இடத்தை நிரப்ப தேர்ந்தெடுக்கப்படுவதற்கு நபரொருவர்;-

  1. ஏதேனும் மாநிலத்தின் பட்டியல் சாதியினருக்கு இடம் ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் போது, அவர் அந்த மாநிலத்தின் அல்லது வேறு ஏதேனும் மாநிலத்தின் பட்டியல் சாதியினைச் சேர்ந்தவராகவும் மற்றும் ஏதேனும் மக்களவைத் தொகுதியில் வாக்காளராகவும்;

  1. ஏதேனும் மாநிலத்தில் [அசாம் மாநிலத்தின் தன்னாட்சி மாவட்டங்கள் தவிர] பட்டியல் பழங்குடியினருக்கும் இடம் ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் போது, அவர் அந்த மாநிலத்தின் [அசாம் பழங்குடி இனத்தவர் பகுதி நீங்கலாக] பழங்குடி இனத்தைச் சார்ந்தவராகவும் மற்றும் ஏதேனும் மக்களவைத் தொகுதியில் வாக்காளராகவும்;

  1. அசாம் மாநிலத்தின் தன்னாட்சி மாவட்டங்களில், பட்டியல் பழங்குடியினருக்கு இடம் ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் போது, அவர் அந்த மாநிலத்தின் அசாம்] பழங்குடி இனத்தைச் சார்ந்தவராகவும் மற்றும் ஏதேனும் மக்களவைத் தொகுதியில் வாக்காளராகவும்; cc) லச்சத்தீவு, யூனியன்பிரதேசத்தில், பட்டியல் பழங்குடியினருக்கு இடம் ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும்போது, அவர் அந்த யூனியன் பிரதேசத்தின் பழங்குடி இனத்தைச் சார்ந்தவராகவும் மற்றும் ஏதேனும் மக்களவைத் தொகுதியில் வாக்காளராகவும்; ccc) சிக்கிம்மாநிலத்தின்இடம்ஒன்றுஒதுக்கீடுசெய்யப்பட்டிருக்கும்போது, அவர் அந்த சிக்கிம் மாநிலத்தின் மக்களவைத் தொகுதியில் வாக்காளராகவும்;

4. ஏதேனும் ஒரு இடம் ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் போது, அவர் அந்த மக்களவைத் தொகுதியில் வாக்காளராகவும்; இருந்தாலன்றி தகுதியுடையவர் ஆகார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com