சினிமா எக்ஸ்பிரஸ்

'இந்த வீடு எனக்கு சாஸ்வதம் கிடையாது'

கவியோகி வேதம்

ட்ரஸ்ட்புரத்தில் எனக்கு வாடகைக்கு வீடு குடுத்த பொழுது நடிகை என்று தெரிவதுதான் கொடுத்தார்கள்.அந்த வீட்டின் சொந்தக்காரர் வெளிநாட்டில் இருந்தார். அவருடைய உறவினர்தான் அந்த வீட்டின் உரிமையாளார்க இருந்து வாடகையும்  வாங்கினார்.

ஆரம்பத்தில் அன்பாக இதமாக பழகி வந்தனர். போக போக நிலைமை மாறியது. கடுமையான வார்த்தை வெடித்தது.

காலி செய்ய வேண்டும் என்றனர். அதற்கு காரணம் வாடகை தகராறு கிடையாது. எல்லா மாதமும் முதல் தேதிக்கு முன்பே நூறு, இருநூறு  என்று சிறுக சிறுக வாங்கி விடுவார்கள்.

வீட்டின் சொந்தக்காரர் வெளிநாட்டில் இருந்து வருகிறார். வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்றனர். உண்மை அதுவல்ல. என்னுடைய வளர்ச்சியைக் கண்டு, இனிமேல் இவர்கள் காலி செய்வார்களோ என்ற அச்சம்.

அடுத்து கங்கா நகருக்கு குடி வந்தேன். இங்கு மூன்று ஆண்டுகள் குடி இருந்தேன். அடிக்கடி "நீங்கள் காலி செய்தால்,எங்களுக்கு இன்னும்  நிறைய வாடகை கிடைக்கும்"என்று கூறி வந்தனர். அடிக்கடி இந்த மாதிரி கூறுவதை கேட்டு ஒரு  நாள் எனக்கு பொறுமை போய் விட்டது.

"இந்த வீடு எனக்கு சாஸ்வதம் கிடையாது.எனக்குத் தெரியும். கட்டாயம் இந்த வீட்டை  காலி செய்யத்தான் போகிறேன் . அதற்கு குறைந்தது மூன்று மாதங்களாகும். சொந்த வீடு வாங்கி கொண்டுதான் காலி செய்வேன்"என்றேன்.

குறிப்பிட்டபடி வீடு வாங்கி கொண்டு நான் காலி  செய்தேன்.

(சினிமா எக்ஸ்பிரஸ் 15.08.81 இதழ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT