சினிமா எக்ஸ்பிரஸ்

ஐயாயிரம் ரூபாய் ஏமாற்றிய எழுத்தாளர் !

கவியோகி வேதம்

ஒரு எழுத்தாளர் நண்பர் என்ற முறையில் எனக்கு அறிமுகமானார். அவரும், அவர்  மனைவியும் அடிக்கடி என்னை அடிக்கடி தம் வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிடுவார்கள். சமயம் இருந்தால் நான் செல்வேன் .எப்போதாவது விருந்தாளியாக நான் சென்ற போதெல்லாம் அவர்கள் அன்பு என்னைத் திக்கு முக்காட வைத்து விடும்.  அவர்களைப் பற்றிய என் எண்ணம் மிக உயர்வாகவே இருந்தது.

ஒரு சமயம் எழுத்தாளரின் மனைவி தனக்கு மிக அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், ஐந்தாயிரம் ரூபாய் தந்தால் மிக்க உதவியாக இருக்கும் என்றும், அப்பணத்தை கடனாகப்  பாவித்து உடனே திருப்பிக் கொடுத்துவிடுவதாகவும் சொன்னார்.

நான் உடனே பணத்தை எடுத்துக் கொடுத்து விட்டேன். அதற்குப் பிறகு அவரகள் பழகும் முறையில்  வித்தியாசம் தெரிந்தது. அவர்கள் முன்பு போல அன்புடன் பேசாததையும் நான் உணர்ந்தேன். எனக்கு காரணம் புரியவில்லை.

நாளாக நாளாக அந்த பிரிவு விரிசலாக மாறியது. இதற்கிடையே ஓரிரு முறை நான் கடனாக குடுத்த பணத்தைப் பற்றிக் கேட்டேன். அவரகள் எந்தவிதமான சுமுகமான பதிலையும் சொல்லவில்லை. எனக்கு குழபபமே ஏற்பட்டது.

கமலிடம் என் குழப்பத்தை சொன்னேன். நன்றாகத் திட்டினான். "நாலு தரம் சாப்பிடக் கூப்பிட்டவுடன் ஐந்தாயிரம் ரூபாய் குடுத்து விட்டாயாக்கும்,பெரிய பரோபகாரி !"என்று கேலி பண்ணினான்.

"ஏன் கமல், ஆபத்துக்கு உதவினேன், தப்பா? அவர்கள் எவ்வளவு கஷ்டத்தில் இருந்தார்களோ? ஏதோ நம்மாலான உதவி, அவ்வளவுதானே? என்றேன்.

"ம்ஹூம், உனக்கு சொன்னாப் புரியாது, தவி" . என்று சபித்தான்.

அவர்களால் அந்த  தொகையை திருப்பிக் கொடுக்க முடியாத அளவுக்கு ஏதேனும் கஷ்டம் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் தொடர்ந்து அவ்ர்கள் பல நண்பர்களுக்கு பார்ட்டிகள் கொடுப்பதும், அவர்களை  உற்சாகப்படுத்துவதாகவும் இருப்பது கண்டு அதிர்ச்சியுற்றேன்.,

வித விதமாக  விருந்தளித்து நண்பர்களை சந்தோஷபப்டுத்தி, பிறகு நண்பர்களையே ஏமாற்றுவதுதான்  நட்பின் இலக்கணமா?

சினிமா எக்ஸ்பிரஸ் 01.07.81 இதழ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இசையரங்க தாக்குதலில் உக்ரைன் தொடா்புக்கு ஆதாரம்

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்!

திருச்செந்தூரில் அனுமதியில்லா கழிப்பறைகளை மூடக் கோரி போராட்டம்

பாஜகவுக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு

SCROLL FOR NEXT