07.08.1951 - அத்யாவசிய சர்விஸ்களில் ஸ்டிரைக் தடை மசோதா: பார்லிமெண்டில் ரயில்வே மந்திரி பிரேரித்தார்

அத்தியாவசிய ஸர்விஸ்களில் ஸ்டிரைக் ஏற்படாமல் தடுப்பதற்கு வசதியளிக்கும் மசோதா வொன்றை இன்று பார்லிமெண்டில் ரயில்வே மந்திரி கோபாலசுவாமி ஜயங்கார் பிரேரித்தார்.

அத்தியாவசிய ஸர்விஸ்களில் ஸ்டிரைக் ஏற்படாமல் தடுப்பதற்கு வசதியளிக்கும் மசோதா வொன்றை இன்று பார்லிமெண்டில் ரயில்வே மந்திரி கோபாலசுவாமி ஜயங்கார் பிரேரித்தார்.

அம்மாதிரி டிரைக்குகளைத் தடை செய்து சமீபத்தில் இந்திய சர்க்கார் பிறப்பித்த அவசரச் சட்டத்தை இம்மசோதா ரத்து செய்கிறது.

இம்மசோதா ஒரு அவசர கால நடவடிக்கையாகும், 1952 டிசம்பர் 31ம் தேதி வரை தான் இது அமலில் இருக்கும் என ஒரு ஷரத்து கூறுகிறது.

பொது ரயில்வே ஸ்டிரைக் ஆரம்பிக்கப் போவதாக அ.இ. ரயில்வே ஊழியர் சம்மேளனம் அறிவித்திருக்கிறது. மற்ற அத்தியாவசிய ஸர்வீஸ்களில் உள்ள தொழிலாளர்களும், ரயில்வே ஊழியர்களுக்கு அனுதாபம் தெரிவிக்க ஸ்டிரைக் செய்யக் கூடும் என்று சர்க்காருக்குத் தெரிய வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com