இனிப்பு வகைகள்

தேங்காய் பர்ஃபி

தவநிதி


தேவையானவை:
துருவிய தேங்காய் - 1 கிண்ணம்
சர்க்கரை - முக்கால் கிண்ணம்
தண்ணீர் - கால் டம்ளர்
நறுக்கிய முந்திரி - 1 தேக்கரண்டி
நெய் - 4  தேக்கரண்டி
ஏலக்காய் பொடி -  அரை தேக்கரண்டி

செய்முறை:
ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கித் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு  தட்டில் சிறிது நெய் ஊற்றி தடவி தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு நான்-ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை  கரையும் வரை கொதிக்க விடவும்.

சர்க்கரை நன்கு கரைந்து, ஓரளவு கெட்டியாக வரும் போது, அதில் துருவிய தேங்காயை சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும். 

அப்படி கிளறிவிடும் போது, நுரைக்க ஆரம்பிக்கும் தருணத்தில் முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து 3 அல்லது 5 நிமிடம் கிளறி, ஓரளவு கெட்டியாகும் போது அடுப்பில் இருந்து  இறக்கி தட்டில் அக்கலவையைக் கொட்டி பரப்பி, கத்தியால் துண்டுகளாக்கினால், தேங்காய் பர்ஃபி ரெடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT