பத்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 8

திருவாட்டாற்றிலே எழுந்தருளியிருப்பவர்
பத்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 8


பாடல் 8

மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திருமுடியன்,
கைந்நின்ற சக்கரத்தன் கருதும் இடம் பொருது, புனல்
மைந்நின்ற வரைபோலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என் நெஞ்சில் திகழ்வதுவே!

எம்பெருமானின் திருமேனியிலே திருத்துளவம் கமழ்கிறது, அதன் நறுமணம் அவருடைய திருமுடியிலே ஏறுகிறது, அவருடைய கையிலிருக்கும் சக்ராயுதமானது, அவர் நினைத்த இடத்துக்குச் சென்று தீயோரை அழித்துவிட்டு அவருடைய கைக்கே மீள்கிறது, அத்தகைய பெருமான், நீர்போலவும், மை போலவும், நின்ற மலைபோலவும் திருவுருவம் கொண்டவர், திருவாட்டாற்றிலே எழுந்தருளியிருப்பவர், அவர் என்னுடைய நெஞ்சில் திகழ்வது ஏன்? நான் அவருக்கு என்ன நன்மை செய்துவிட்டேன்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com