நூல் அரங்கம்

மறுக்கப்படும் மருத்துவம்

DIN

மறுக்கப்படும் மருத்துவம் - தொகுப்பாசிரியர்: பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு; பக்.94; ரூ.30; பாரதி புத்தகாலயம், சென்னை-18; )044- 2433 2424.
இந்திய மருத்துவ ஆணைய மசோதா (NMC BILL, 2017) நாடாளுமன்றத்தில் மக்களவையில் தாக்கலாகியுள்ளது. 2018 குளிர்கால கூட்டத் தொடரில் இது நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. 
இந்த மசோதா நிறைவேற்றப்படுமானால், மருத்துவம் சார்ந்த மாநில அதிகாரங்கள் பறிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும், மருத்துவத்தையும், மருத்துவக் கல்லூரியையும் சந்தையிடம் ஒப்படைக்க வழி ஏற்படும் என்றும் இந்நூல் எச்சரிக்கிறது. 
ஏற்கெனவே உள்ள இந்திய மருத்துவ கவுன்சிலின் இடத்தில் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்படுவதால் ஏற்படக் கூடிய விளைவுகளை இந்நூல் சுட்டிக்காட்டுகிறது. 
மருத்துவக் கல்லூரிகளைத் தனியாரிடம் ஒப்படைப்பது, மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு முறைகளினால் ஏழை, அடித்தட்டு மாணவர்கள் மருத்துவக் கல்வி கற்க முடியாமல் போவது, தத்தம் தனித்தன்மையுடன் வளர்ந்துவரும் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், ஹோமியோபதி மருத்துவ மாணவர்களுக்கு அலோபதி மருந்துகளைக் கொடுக்க பயிற்சி அளிப்பதால் அம்மருத்துவங்கள் தனித்தன்மையை இழக்கும் அபாயம் உள்ளிட்ட பல விளைவுகளை இந்நூலில் உள்ள கட்டுரைகள் விளக்குகின்றன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT