நூல் அரங்கம்

இடம், பொருள், மனிதர்கள்

மாதவ பூவராக மூர்த்தி

இடம், பொருள், மனிதர்கள் - மாதவ பூவராக மூர்த்தி; பக்.156; ரூ.130; விருட்சம் வெளியீடு, சென்னை 33; 044- 24710610. 
சிந்தனை வெளிப்பாட்டின் சிறு குறிப்புகளாகத் தொடங்கிய பேஸ்புக் பக்கம் இன்று நீண்ட பதிவுகளுக்கு இடம் கொடுக்கிறது. இந்த மின்னூடகப் பதிவுகள் மீண்டும் அச்சு உருப்பெற்று, புதிய வாசக வட்டத்தைக் கவர்வதும் இப்போது இயல்பாகிவிட்டது. அப்படிப்பட்ட ஒரு நூல்தான் இது. 
இருபத்தாறு தலைப்புகளில் மாதவ பூவராக மூர்த்தியின் பேஸ்புக் பதிவுகள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. சிந்தனை வெளிப்பாடுகள் என்ற நிலையைத் தாண்டி, ஏறத்தாழ சிறுகதைகள் என்றே குறிப்பிடும் அளவுக்கு சில பதிவுகள் அமைந்துள்ளன.
வீடு மாற்றம், ஷண்முக விலாஸ் ராமநாதன், ரவா தோசை, அருமையான எழுத்தின் அடையாளம். "காணாமல் போன சைக்கிள்' இன்பமான நினைவுகளைத் தட்டியெழுப்புவதாக உள்ளது. "கெங்கு மாமியின் கடைசி ஆசை' இன்னும் பல வடிவங்களில் விரியக் கூடிய சம்பவங்களைக் கொண்ட ஒரு பதிவாக அமைந்துள்ளது.
கல்கி தொடங்கி பழைய தஞ்சாவூர் ஜில்லாக்காரர்கள் அத்தனை பேரும் எழுதியும் இன்னும் அலுப்பு தட்டாத காவேரி காட்சிகள். மாதவ பூவராகமூர்த்தியும் அவர் பங்குக்கு ஆடிப்பெருக்கு பற்றி எழுதியிருக்கிறார். ஜாம்பவான்களின் எழுத்துக்கு சற்றும் குறையாத வாளிப்போடு ஆடிப்பெருக்கு மாலைப் பொழுதைக் கண் முன் காட்சி தர வைக்கிறார். நூலாசிரியரின் நண்பர்கள் இந்த மின்னூடகப் பகிர்வுகளைப் படித்திருக்கக் கூடுமென்றாலும், இணையத்தால் இணையாத மேலும் பலர் இப்போது அவற்றை அச்சு வழியாகப் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT